Type Here to Get Search Results !

நோபல் பரிசு 2025 / NOBEL PRIZE 2025

 நோபல் பரிசு 2024 / NOBEL PRIZE 2024

NOBEL PRIZE

  • நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. 
  • நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. 
2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025

2025ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2025

  • உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
  • ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக?

  • இவர்கள் 3 பேருக்கும் புற நோய் எதிர்ப்பு சகிப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்பிற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டுபிடிப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தியின் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
  • நோபல் பரிசு பெற்றுள்ள ஜப்பான் விஞ்ஞானி சைமன் முன் எப்போதும் அறியப்படாத நோய் எதிர்ப்பு செல்களின் ஒரு வகுப்பை கண்டுபிடித்தார். இது உடலை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஒத்துழைக்கிறது. இதை அவர் 1995ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
  • நோபல் பரிசு பெற்றுள்ள மேரி ப்ரங்கோ மற்றம் ஃப்ரெட் ராம்ஸ்டெல் இருவரும் 2011ம் ஆண்டு முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தனர். 
  • அதாவது, மனித மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்தது. அதற்கு அவர்கள் ஃபோக்ஸ்பி3 என்று பெயரிட்டனர். இதை இவர்கள் கண்டுபிடித்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் விஞ்ஞானி சைமனும் இவர்களுடன் இணைந்தார்.
  • அப்போது, 1995ம் ஆண்டில் அவர் கண்டுபிடித்த செல்களின் வளர்ச்சியை ஃபோக்ஸ்பி3 மரபணு நிர்வகிக்கிறது என்று நிரூபித்தார். இவர்களின் கண்டுபிடிப்புகள் நமது செல்கள் நோய் எதிர்ப்பு செல்களை கண்காணித்து நோய் எதிர்ப்பு செல்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • ஃப்ரெட் ராம்ஸ்டெல் அமெரிக்காவில் உள்ள சோனோமா பயோதெரபிடிக்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். சைமன் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த துறையில் பேராசிரியராக உள்ளார். 
  • மேரி ப்ரங்கோ அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சியாட்டிலில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார்.

2025ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSICS 2025


2025ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSICS 2025
  • 2025ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSICS 2025: ஒவ்வொறு ஆண்டும் பல்வேறு துறைகளில் தங்களது சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசானது வழங்கப்படுகிறது. 
  • அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட், ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மின்காந்தச் சுற்றில், மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் ஆகியவை குறித்த ஆய்வின் கண்டுபிடிப்பாக மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
  • இந்த ஆராய்ச்சி, குவாண்டம் கணினிகள் மற்றும் சூப்பர்கண்டக்டர்கள் போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படையை வலுப்படுத்தியுள்ளது. இவர்களின் பணி, அணு அளவிலான நடத்தங்களை பெரிய அளவில் கட்டுப்படுத்தும் வழிகளை வெளிப்படுத்துகிறது.
  • இந்த ஆண்டின் நோபல் பரிசுகள், அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கண்டுபிடிப்புகளை வலியுறுத்துகின்றன. மருத்துவ பரிசு நோய் எதிர்ப்பு துறையை முன்னேற்றியதுபோல், இயற்பியல் பரிசு குவாண்டம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு உதவும். இன்னும் வேதியியல் மற்றும் பிற துறைகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2025


2025ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2025
  • 2025ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2025: ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
  • ஸ்வீடன் நாட்டின் சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் இந்த பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட 6 துறைகளை மையபப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் வழங்கப்படும். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி 3 பேருக்கு நேபால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் சாதித்ததற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
  • உலோக-கரிம கட்டமைப்புகள் (Metal-Organic Frameworks - MOFs) எனப்படும் புதிய பொருட்களை முன்னோடியாக உருவாக்கி, அவற்றின் வளர்ச்சிக்குப் பங்களித்ததற்காக இந்த மூவருக்கும் இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது. 
  • வேதியியல் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள MOF-கள், எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பல சவால்களுக்குத் தீர்வுகளைக் காண வேதியியலாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2025


2025ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2025
  • 2025ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2025: நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
  • அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் லாஸ்லோவின் கவர்ச்சியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
  • லாஸ்லோ கிராஸ்னஹோர்காய், 1954-ல் ஹங்கேரியில் பிறந்தார். சட்டப் படிப்பு படித்திருந்தாலும், இலக்கியத்தின் மீது கொண்ட தீராத காதலால், ஹங்கேரிய மொழியையும் இலக்கியத்தையும் கற்றார். 
  • அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், கம்யூனிச ஆட்சியின் கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக, வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கடவுச்சீட்டே பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சவாலான காலகட்டத்தில்தான் அவர் எழுதத் தொடங்கினார்.
  • இந்த அடக்குமுறை உணர்வுகளை அவர் சலிப்பாக மாற்றாமல், தனது முதல் நாவலான 'சத்தான் டாங்கோ'-வில் (Satantango) தீவிரமான உணர்வுகளாக மாற்றினார்.
  • லாஸ்லோவின் இரண்டாவது நாவலான 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance)-யைப் படித்த அமெரிக்க விமர்சகர் சூசன் சோண்டாக், இவரைச் சமகால இலக்கியத்தின் 'பேரழிவின் மாஸ்டர்' என்று பாராட்டினார். 
  • கிராஸ்னஹோர்காய், தனது எழுத்தில் ஏற்படுத்திய ஒரு புரட்சிகரமான மாற்றம், அவர் முற்றுப் புள்ளிகளை (Full Stop) பயன்படுத்துவதைத் தவிர்த்ததுதான்.
  • இதனால், அவருடைய வாக்கியங்கள் மிகவும் நீளமானதாகவும், சில சமயம் ஒரு முழுப் பக்கத்திற்கு ஓடக்கூடியதாகவும் இருக்கும். இந்த அசாதாரணமான பாணிதான் அவருடைய அடையாளம். 
  • 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance) போன்ற இவரது படைப்புகளில், இந்த நீண்ட வாக்கியங்கள் வாசகனை ஒரு தொடர்ச்சியான சிந்தனை ஓட்டத்தில் மூழ்கச் செய்கின்றன.
  • நோபல் பரிசு கிராஸ்னஹோர்காய்க்கு முதல் வெற்றி அல்ல. அவர் தனது படைப்புகளுக்காக 2015-ஆம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேசப் பரிசைப் பெற்றார். அதன் பிறகு 2019-ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய புத்தக விருது (National Book Award) உட்படப் பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். 
  • மேலும், ஹங்கேரிய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பேலா டார், கிராஸ்னஹோர்காயின் நாவல்களைத் திரைப்படங்களாக மாற்றியதன் மூலம், அவரது கலை உலகளாவிய கவனத்தைப் பெற்றது.

2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PEACE 2025


2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PEACE 2025
  • 2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PEACE 2025: 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது.
  • வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வெனிசுவேலாவில் ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து போராடி தற்போது தலைமறைவாக இருப்பவர் மரியா கொரினா மச்சாடோ என்பது குறிப்பிடத்தக்கது.
  • பல போர்களை நிறுத்தியிருக்கிறேன், எனவே, அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • இந்தியா - பாகிஸ்தான் உள்பட 8 போர்களைத் தான் நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் நிறுத்தியதாக கூறி வந்த நிலையில் ஏற்கனவே, நான்கு அமெரிக்க அதிபர்கள் நோபல் பரிசு வென்றிருக்கும் நிலையில், ஐந்தாவது அதிபராக இவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஏமாற்றம் டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது.
  • கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 339 பேரில் டொனால்ட் டிரம்ப் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.
  • உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காகப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என்று பரிசை அறிவித்த நார்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
  • மேலும், ஜனநாயகத்துக்காகப் போராடி வருபவர்களுக்கே விருது என்றும், சர்வாதிகாரத்தை நம்பக் கூடியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்பதையும்தான் இந்தக் கருத்து தெளிவுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.
  • நார்வே நோபல் குழுதான், நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தக் குழுவை நார்வே நாடாளுமன்றமே நியமனம் செய்கிறது.
  • வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரினா, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் முக்கிய அரசியல்வாதியாகவும் இருந்தவர்.
  • நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அவர், அந்நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க நடத்திய போராட்டங்களுக்காகக் கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்து தலைமறைவாக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஜனநாயகத்தைக் காக்கவும் மனித உரிமைகளைக் காக்கவும் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களுக்காக நோபல் பரிசு வழங்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய வெனிசுவேலா அரசு தயாராக இருப்பதால் அவர் தலைமறைவாக இருக்கிறார்.
  • கடந்த 2024 ஆம் ஆண்டு வெனிசுவேலாவில் நடைபெற்ற தேர்தலில், வன்முறை வெடித்தது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தரப்பு மறுத்து வரும் நிலையில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மரியா ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். 
  • பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். இத்தகைய சூழலில்தான் அவருடைய முயற்சியை பாராட்டி நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2025


2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2025
  • 2025ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2025: மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
  • ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
  • அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த 06ஆம் தேதி (06.10.2025) முதல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி என நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டன. 
  • இந்நிலையில் இந்த (2025) ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோக்கர், பிலிப் அகியான், பீட்டர் ஹர்விட் என 3 பேருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் மூவருக்கும் 8.25 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது ராயல் ஸ்வீடிஸ் அறிவியல் அகாடமி சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதாவது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான நிபந்தனைகள் அடையாளம் காணுதல், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காகவும் வழங்கப்படுகிறது.
  • கடந்த 1969ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 56 ஆண்டுகளாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 57வது முறையாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel