2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025
TNPSCSHOUTERSOctober 25, 2025
0
2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: உலகின் பல்வேறு நாடுகளிலும் புவிசார் பதற்றம், போர், மோதல்கள் அதிகரித்து வருகிறது. எப்போதும் இதுபோன்ற சூழல்களில் அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நாடுகள் லிஸ்டும் கூட நமக்கு அதையே காட்டுகிறது. இது உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மகிழ்ச்சியான நாடுகள்
2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நலவாழ்வு ஆராய்ச்சி மையம், கேலப் மற்றும் ஐ.நா.வின் வளர்ச்சி மையத்துடன் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), ஆரோக்கியமான ஆயுள் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், தாராள மனப்பான்மை, மற்றும் ஊழல் குறித்த கருத்துகள் ஆகியவை அடிப்படையில் இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
யார் முதலிடம்?
2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: பொதுவாகவே இந்த ஹேப்பி நாடுகள் பட்டியலில் எப்போதும் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தும். நடப்பு ஆண்டில் கூட அது விதிவிலக்கு இல்லை. 2025 உலக மகிழ்ச்சி ரிப்போர்ட்டில், பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது.
பின்லாந்து தொடர்ந்து 8வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகள் லிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள விரிவான நலத்திட்ட அமைப்பு உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
பின்லாந்தை தொடர்ந்து இந்த லிஸ்டில் டென்மார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சமத்துவம், அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்குவது, சமச்சீர் வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை இதற்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அடுத்து மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது. அதன் சமூகப் பிணைப்புகள் மற்றும் அற்புதமான இயற்கைச் சூழல் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கிறது.
ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய நாடுகள்
2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் ஸ்வீடன் இருக்கிறது. முற்போக்கான கொள்கைகள் மற்றும் ஒர்க் லைஃப் பேலன்ஸ் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே இதற்குக் காரணமாகும்.
தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. மனநல விழிப்புணர்வு மற்றும் தரமான கல்வி ஆகியவையே இதற்குப் பிரதானக் காரணமாகும். இப்படி ஹேப்பி நாடுகள் லிஸ்டில் முதல் 5 இடங்களுமே ஐரோப்பிய நாடுகளுக்குத் தான் செல்கிறது.
ஆறாவது இடத்தில் தான் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா வருகிறது. மேலும், இது அமெரிக்கக் கண்டத்திலேயே மகிழ்ச்சியான நாடாகத் தொடர்கிறது.
அமைதி மற்றும் நிலைத்தன்மைக்குப் பெயர் பெற்ற கோஸ்டாரிகா, இந்த லிஸ்டிலும் 6வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து ஏழாவது இடத்தில் சமச்சீர் செல்வம், தூய்மையான, நிலையான சுற்றுச்சூழல் ஆகியவக்கு பெயர்போன நார்வே இருக்கிறது.
எட்டாவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது. பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்து அதிக மார்க்குகளை பெற்று வருகிறது.
உலக நாடுகள்
2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: இதில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை வழங்கும் லக்சம்பர்க் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து 10வது இடத்தில் மெக்சிகோ வருகிறது.
பொருளாதாரச் சவால்கள் இருந்தாலும், செழுமையான கலாச்சாரம் மற்றும் குடும்பத்திற்கு ஆழமான மதிப்புகளைக் கொடுப்பது மெக்சிகோவை மகிழ்ச்சியான நாடுகள் லிஸ்டில் கொண்டு வந்துள்ளது.
டாப் 10 இடங்களில் மெக்சிகோ வருவது இதுவே முதல்முறையாகும். ஒட்டுமொத்தமாக டாப் 10ல் கோஸ்டாரிகா, மெக்சிகோ, இஸ்ரேல் தவிர மற்ற 7 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எங்கே?
2025 ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் / LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: 147 நாடுகளைக் கொண்ட இந்த லிஸ்டில், இந்தியா 118வது இடத்தைப் பிடித்துள்ளது, கடந்த 2024ஆம் ஆண்டில் 126வது இடத்தில் இந்தியா இருந்த நிலையில், ஒரே ஆண்டில் கணிசமாக முன்னேறி இருக்கிறது.
மனநலம், வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் சமூக உதவிகள் கிடைப்பதில் உள்ள சிக்கல் இந்தியாவின் பிரதானச் சவாலாக இருக்கிறது.
ENGLISH
LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: Geopolitical tensions, wars, and conflicts are increasing in various countries of the world. Innocent civilians are always the ones who suffer the most in such situations.
The 2025 World Happiness Report also shows us the same. It sheds light on the quality of life of the people of the world.
Happiest Countries
LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: The Oxford University Well-Being Research Center, in collaboration with Gallup and the UN Development Center, has released this report.
The list is based on gross domestic product (GDP) per capita, healthy life expectancy, social support, freedom to choose one's favorite, generosity, and perceptions of corruption.
Who is at the top?
LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: Generally, European countries always dominate the list of happy countries. This year is no exception. In the 2025 World Happiness Report, Finland is at the top. It is noteworthy that Finland has been on the list of the happiest countries in the world for the 8th consecutive year. The main reasons for this are the extensive welfare system there.
Denmark is ranked second on this list after Finland. Equality, inclusion of all communities, and emphasis on a balanced lifestyle are said to be the main reasons for this. Iceland is in third place. Its social bonds and magnificent natural environment are the reasons for this.
Dominant European countries
LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: Sweden is in fourth place on this list. This is due to its progressive policies and high emphasis on work-life balance. The Netherlands is in fifth place.
Mental health awareness and quality education are the main reasons for this. Thus, all the top 5 places in the Happy Countries list go to European countries.
The Central American country of Costa Rica comes in sixth place. Moreover, it continues to be the happiest country in the American continent. Costa Rica, known for its peace and stability, is also in 6th place on this list.
Norway, known for its balanced wealth, clean and sustainable environment, is in seventh place. Israel is in eighth place. Despite economic and geopolitical tensions, Israel continues to receive high marks.
Countries of the World
LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: Luxembourg, which offers economic stability and a high standard of living, is in ninth place. Next comes Mexico in 10th place. Despite economic challenges, its rich culture and deep values for family have brought Mexico to the list of happiest countries.
This is the first time that Mexico has appeared in the top 10. It is noteworthy that in the overall top 10, apart from Costa Rica, Mexico and Israel, 7 other countries are from Europe.
Where is India?
LIST OF HAPPIEST COUNTRIES IN WORLD 2025: In this list of 147 countries, India ranks 118th, a significant improvement from 126th in 2024. Mental health, income inequality, and access to social assistance are the main challenges facing India.