
1st OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.50%-ஆக மாற்றாமல் அதே அளவில் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் பாதியில் ரிசர்வ் வங்கி மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தது.
- ஆனால், கடந்த ஆகஸ்ட் மாத கூட்டத்தில் விகித மாற்றத்தை நிறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில், வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்ததன் காரணமாக வரி வசூல் அதிகரித்ததாக அரசு விளக்கமளித்துள்ளது. 2024 செப்.ல் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.73 லட்சம் கோடியாகவும் 2025 ஆகஸ்டில் ரூ.1.86 லட்சம் கோடியாகவும் இருந்தது.
- மொத்த வரி வருவாயில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 6.8% அதிகரித்து ரூ.1.35லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதிப் பொருள்கள் மீதான வரி 15.6% அதிகரித்து ரூ.52,492 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கூடுதலாகச் செலுத்தப்பட்டு, திருப்பி அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.28,657 கோடி என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று (அக்.1) விவாதிக்கப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் (முன்தேதியிட்டு) அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் இந்த ஒப்புதலால் பணியில் இருக்கும் மற்றும் பணி ஓய்வுபெற்றோர் சுமார் 1.15 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விலைவாசி உயர்வை சமாளிக்க ஊழியர்களுக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகிறது.
- அதன்படி, மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் அளித்து 53 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
- தற்போது ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 55 சதவிகிதத்தில் இருந்து 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- உயிரி தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் மற்றும் எஸ்பிவி இந்தியா கூட்டமைப்பு 2025-26 முதல் 2030-31 வரை, கூடுதலாக அடுத்த ஆண்டுகள் வரையிலும், (2031-32 முதல் 2037-38 வரை) அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதற்காக, மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.
- திறன்கள் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளுடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டம், அதிநவீன உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான உயர்மட்ட அறிவியல் திறமைகளை மேம்படுத்துவதுடன், மொழிபெயர்ப்பு கண்டுபிடிப்புகளுக்கான இடைநிலை ஆராய்ச்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
- இது உயர்தர ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்தும். மேலும் அறிவியல் திறனில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, உலகத் தரம் வாய்ந்த உயிரி மருத்துவ ஆராய்ச்சி திறனை உருவாக்க உதவிடும்.
- உயிரி தொழில்நுட்பத் துறை, வெல்கம் டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து 2008-2009 ஆம் ஆண்டில், உயிரி மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், உலகத் தரத்தில் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உயர் படிப்புகளை வழங்குகிறது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டம் 2018 / 19 - ம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்ட பாடத் திட்டங்களுடன் செயல்படுத்தப்பட்டது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தன்னிறைவு நிலையை அடைவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26 முதல் 2030-31 வரை ஆறு ஆண்டு காலத்திற்கு, 11,440 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- இந்தியாவில் பயிரிடும் முறைகள் மற்றும் உணவு முறைகளில் பருப்பு வகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாகவும், அதிக நுகர்வோரை கொண்ட நாடாகவும் உள்ளது.
- அதிகரித்து வரும் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்துடன், பருப்பு வகைகளின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு தேவைக்கு ஏற்ப அதன் உற்பத்தி இல்லை என்பதால், பருப்பு இறக்குமதி 15-20% வரை அதிகரித்துள்ளது.
- இந்த இறக்குமதி சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், 2025-26 - ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 6 ஆண்டு கால "பருப்பு வகை உற்பத்தியை அதிகரிப்பதற்கான தற்சார்பு இயக்கம்" அறிவிக்கப்பட்டது.
- வேளாண் ஆராய்ச்சி, விதை அமைப்புகள், பரப்பளவு விரிவாக்கம், கொள்முதல் மற்றும் விலை நிலைத்தன்மையை உள்ளடக்கிய ஒரு விரிவான உத்தியை இந்த இயக்கம் ஏற்றுக்கொள்ளும்.
- அதிக உற்பத்தித்திறன், பூச்சி கொல்லி மருந்து மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தைத் தாங்கி வளரும் திறன் கொண்ட புதிய வகை பருப்பு வகைகளை உருவாக்கி பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பருப்பு சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களில் அதற்கான சூழலை உறுதி செய்வதற்காக பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
- கூடுதலாக, உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள் ஐந்து ஆண்டு கால சூழல் விதை உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்கும். இனப்பெருக்க விதை உற்பத்தி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தால் மேற்பார்வையிடப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான மொத்த நிதி தேவை 5862.55 கோடி (தோராயமாக) ரூபாயாகும்.
- இதில் மூலதனச் செலவாக 2585.52 கோடி (தோராயமாக) ரூபாயும், செயல்பாட்டுச் செலவாக 3277.03 கோடி (தோராயமாக) ரூபாயும் அடங்கும்.
- தேசியக் கல்விக் கொள்கை, 2020-க்கான முன்மாதிரிப் பள்ளிகளாக, முதன்முறையாக, இந்த 57 கேந்திரிய பள்ளிகளில் பால்வாடிகள், அதாவது 3 ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு முந்தைய நிலையிலான வகுப்புகள், தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் படைகள் உட்பட மத்திய அரசில் பணியிட மாற்றம் செய்யக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்ய முடியாத ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் சீரான தரத்தில் கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 1962 - ம் ஆண்டு நவம்பரில் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்தது. இதன் விளைவாக, "மத்திய பள்ளிகள் அமைப்பு" மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்டது.