
18th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சித்த மருத்துவ, தனியார் பல்கலை.கள் உருவாக்கம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்
- சட்டப்பேரவையில் ஊரக உள்ளாட்சிகளில் கழிவுநீக்க செயல்பாடுகளுக்கு உரிமம் வழங்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார்.
- நெடுஞ்சாலை, கடல் சரக்கு போக்குவரத்தில் குற்றங்கள் குறித்து, நீதிமன்ற வழக்குகள் வரும்போது, சிறைதண்டனை, அபராதம் விதிப்பதை தவிர்த்து பணம் சார்ந்த உரிமையியல் தண்டத்தொகை விதிப்பதை செயல்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத் துறை, கடல்சார் வாரிய சட்டங்களில் திருத்த முன்வடிவுகளை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார்.
- மின்துறை, தொழிற்கல்வி நிலையங்கள், தனியார் கல்லூரிகளில் பணம் சார்ந்த தண்டத்தொகை விதிப்பதை செயல்படுத்தும் சட்ட முன்வடிவுகளை அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
- அதேபோல், சமய நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை நிறுவுதல், பராமரித்தல், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணம் செய்பவர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளை நிறுவ இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிமுகம் செய்தார்.
- இதைத்தொடர்ந்து, நிதியொதுக்கச் சட்டமுன்வடிவை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். இவற்றைத் தொடர்ந்து, இந்த சட்ட முன்வடிவுகள், ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டன. இவைதவிர கடந்தாண்டு பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு, ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை திருத்தச்சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
- மேலும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியம் உயர்வு, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவில் மாற்றுத்திறனாளிகளை நியமித்தல், வழக்கிழந்த சட்டங்களை நீக்கும் நீக்கறவு சட்ட முன்வடிவுகள், ஊராட்சிகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீடித்தல், ஊரக உள்ளாட்சிகளில் கழிவுநீக்க செயல்பாடுகளுக்கு உரிமம் வழங்குதல் ஆகிய சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
- இதுதவிர, ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட முன்வடிவு, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்குதல், தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல், பல்கலைக்கழகங்களில் ஆசிரியரல்லா பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான சட்ட முன்வடிவுகள் என 18 சட்ட முன்வடிவுகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம், செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
- இந்தக் குறியீடுகள் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 மாதிரி கிராமங்களின் தொகுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
- 2025 செப்டம்பர் மாதத்தில், விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை: 2019=100) 0.11 புள்ளிகள் குறைந்து 136.23 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு 0.18 புள்ளிகள் குறைந்து 136.42 ஆகவும் இருந்தது.
- செப்டம்பரில் உணவு குறியீடு விவசாயத் தொழிலாளர்களுக்கு 0.47 புள்ளிகளும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு 0.58 புள்ளிகளும் குறைந்துள்ளது.

 
 
