
2nd SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் செமிகான் இந்தியா 2025ஐ தொடங்கிவைத்தார்
- இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
- செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் செமிகான் இந்தியா 2025 என்ற 3 நாள் மாநாடு இந்தியாவில் வலுவான நீடித்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும்.
- மேலும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைப்பதோடு புத்தொழில் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு, இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.
- இந்த மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 50 உலகளாவிய தலைவர்கள் உட்பட 150-க்கும் அதிகமான உரையாளர்கள் 350-க்கும் அதிகமான காட்சிப்படுத்துநர் உட்பட 20,750 பேர் பங்கேற்பார்கள்.
- இதில், 6 நாடுகளின் வட்டமேசை விவாதங்களும் நடைபெறும். பணியாளர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான அரங்குகளும் இடம் பெறும்.
- பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள், திரு சாம்ராட் சௌதரி, திரு விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமிக்க செவ்வாய்க்கிழமையில் உயர்ந்த நம்பிக்கைக்குரிய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
- வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பீகாரின் அன்னையர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு புதிய வசதி அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
- இந்தியா – தாய்லாந்து இடையேயான 14-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மைத்ரி’ மேகலாயாவின் உம்ராயில் செப்டம்பர் 1 அன்று தொடங்கியது.
- செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ள இருதரப்பு பயிற்சியில் இருநாட்டு ராணுவங்களின் தற்போதைய திட்டங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
- இந்திய ராணுவத்தின் சார்பில் 120 வீரர்களும் தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 53 வீரர்களும் இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 13-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் டாக் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வச்சிராப்ராக்கானில் நடைபெற்றது.