
21st SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அரசுடன் கொச்சி ஷிப்யார்ட் மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன.
- “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும்.
- மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும்.
- இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்.
- திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில் இரும்புக் கால இடுகாடு உள்ளது. இங்கு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், 2024ஆம் ஆண்டுமுதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
- அகழாய்வு இயக்குநா் வசந்தகுமாா், துணை இயக்குநா் காளிஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் கற்களாலான அரண்களுக்குள் ஈமத் தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
- 13.50 மீட்டா் நீளம், 10.50 மீட்டா் அகலமுள்ள 35 கற்பலகைகளாலான அரணுக்குள் ஈமத் தாழிகள் இருந்ததும், அவற்றின்மேல் 1.50 மீட்டா் உயரத்துக்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
- இப்பகுதியில் 38 குழிகள் தோண்டப்பட்டதில் 75 சிவப்பு, ஒரு கருப்பு சிவப்பு என 76 ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கழுத்துப் பகுதியில் கூம்பு, கூம்பின்கீழ் வட்டம், வட்டத்துக்குள் கூட்டல் என பல்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- மேலும், 2.5 மீட்டா் நீள ஈட்டியும் கிடைத்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்றதில் இது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத்கக்தது.
- மேலும், 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமத் தாழிகள், பல வடிவத்தாலான மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் என 250-க்கு மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இவை சுமாா் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.
- உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 42. கி.மீ. மாரத்தான் ஸ்டேட்டிங்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- இதமூலம், ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- இதே சாம்பியன்ஷிப் போட்டியில், 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

