
20th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை குடிநீர் செயலி முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்
- சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய 'சென்னை குடிநீர் செயலி' என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது.
- ”மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்", பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியினை பேராசிரியர் கே. ராஜன் அவர்களின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
- குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார்.
- கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.
- குஜராத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில், ₹26,354 கோடிக்கு மேல் மதிப்புள்ள மத்திய, மாநில அரசின் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- சாரா துறைமுகத்தில் ஹெச்பி எல்என்ஜி மறுசுழற்சி முனையம், குஜராத் ஐஓசிஎல் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய திட்டம், 600 மெகாவாட் பசுமை முன் முயற்சி, விவசாயிகளுக்கான பிரதமரின் குசும் திட்டத்தில் 475 மெகாவாட் சூரிய சக்தி திட்டம், 45 மெகாவாட் படேலி சூரிய மின் சக்தி திட்டம், தோர்டோ கிராமத்தின் முழுமையான சூரிய சக்தி மின் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைத்தார்.
- பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனை, ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சின் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் விரிவாக்கங்கள் உட்பட, எரிசக்தி திட்டங்கள், கடலோர பாதுகாப்பு பணிகள், நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- லோதலில் சுமார் ₹4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NHMC) முன்னேற்றத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இந்திய கடற்படைக்கும் ஹெலனிக் (கிரீஸ்) கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியின் முதல் பதிப்பு 2025 செப்டம்பர் 18 அன்று மத்தியதரைக் கடல் ப குதியில் நிறைவடைந்தது.
- இது இந்தியாவிற்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
- துறைமுக கட்டம் 2025 செப்டம்பர் 13 முதல் 17 வரை சலாமிஸ் கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடல்சார் கட்டம் 2025 செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
- இந்தப் பயிற்சியில் இந்தியா சார்பில் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் திரிகண்ட் பங்கேற்றது. துறைமுக கட்டத்தில், இரு கடற்படைகளின் பணியாளர்களும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
- கடல்சார் கட்டத்தில் சிக்கலான கடல்சார் உத்திகள் தொடர்பான பயிற்சிகள் நடைபெற்றன.
- தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக் குழு வழங்கியுள்ள பரிந்துரையின்பேரில், மோகன்லாலுக்கு கௌரவமிக்க தாதா சாகேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று(செப். 20) மாலை தெரிவித்துள்ளது.
- 65 வயதான மோகன்லால் திரைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு மோகன்லாலில் திரை வாழ்வில் பொன்னான காலக்கட்டம் எனலாம். அவர் அந்த ஓராண்டில் மட்டும் 34 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
- மலையாளத்தில் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் 350க்கும் மேற்பட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் திரைக்கதைக்கு உயிரூட்டிய சாதனைக்காரராவார்.
- 1989 இல் வெளியான கிரீடம், அதன்பின் பரதம் (1991), வனப்பிரஸ்தம் (1999) ஆகியவற்றில் இவர் காட்டிய யதார்த்த நடிப்புத்திறமை இவருக்கு தேசிய விருதுகளையும் பெற்றுத் தர தவறவில்லை.
- இந்த நிலையில், மோகன்லாலுக்கு செப். 23-இல் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளது.

 
 
