Type Here to Get Search Results !

நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் 2025 / BEST HIGHER EDUCATION INSTITUTION IN INDIA 2025

  • நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் 2025 / BEST HIGHER EDUCATION INSTITUTION IN INDIA 2025: தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
  • இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர மிகவும் உதவியாக உள்ளது. அதன் அடிப்படையில் கல்வி அமைச்சகம் 10வது தரவரிசைப் பதிப்பை இன்று அறிவித்தது. 
  • இந்தப் பட்டியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், மருத்துவம், மேலாண்மை, மருந்தியல், சட்டம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது.
  • அதன்படி, நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.சொல்லப்போனால், சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடம் பிடித்துள்ளது, மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது.
  • ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • அதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜெஎன்யு) புதுதில்லி மற்றும் மணிப்பால் உயர் கல்வி அகாடமி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • கல்லூரிகள் பிரிவில் தில்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மிராண்டா ஹவுஸ் மற்றும் ஹன்ஸ்ராஜ் கல்லூரி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஐஐடி தில்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவையாகும். நாட்டின் சிறந்த மேலாண்மை நிறுவனமாக ஐஐஎம் அகாமதாபாத் உருவெடுத்துள்ளது.
  • அதேநேரத்தில் ஜாமியா ஹம்தார்ட் புதுதில்லி மருந்தகப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. மருத்துவக் கல்வித் துறையில், புது தில்லி எய்ம்ஸ் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரியாக தனது நிலையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

ENGLISH

  • BEST HIGHER EDUCATION INSTITUTION IN INDIA 2025: The National Institute Ranking Framework (NIRF) 2025 is an annual ranking list of top educational institutions, universities and colleges published by the Ministry of Education. Based on this list, it is very helpful for students to get admission in universities and colleges. 
  • Based on this, the Ministry of Education announced the 10th edition of the rankings today. This list evaluates higher education institutions in various fields including universities, engineering, medicine, management, pharmacy, law, architecture.
  • Accordingly, IIT Madras has topped the list of the best higher education institutions in the country. In fact, IIT Madras has topped the list for the 7th consecutive year. 
  • The Indian Institute of Science, Bangalore has ranked 2nd in the ranking, IIT Mumbai has ranked 3rd, and IIT Delhi has ranked 4th. IIT Madras has topped the overall category for the seventh consecutive year. 
  • IISc Bangalore has been ranked as the best university. It was followed by Jawaharlal Nehru University (JNU) New Delhi and Manipal Academy of Higher Education at the second and third positions respectively.
  • In the colleges category, Hindu College, Delhi retained the top spot. Miranda House and Hansraj College took the second and third positions respectively. IIT Madras also topped the engineering category. It was followed by IIT Delhi and IIT Mumbai.
  • IIM Ahmedabad emerged as the country's top management institute.  Meanwhile, Jamia Hamdard New Delhi topped the pharmacy category. In the medical education category, AIIMS New Delhi regained its position as the top medical college in India.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel