
17th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
.
தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
- நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- 2901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- கடந்த 2024-25-ம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு ரூ.214.542 கோடியை விடுவித்துள்ளது. (தகுதியுடைய அனைத்து 2,192 கிராமப் பஞ்சாயத்துகள், 156 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள் மற்றும் தகுதியுடைய அனைத்து 27 மாவட்ட பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது)
- பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார்.
- படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.
- சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
- மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
- மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.