
16th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் 'ஆந்த்ராத்' கடற்படையிடம் ஒப்படைப்பு
- ஆழமற்ற கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASW-SWC) கொல்கத்தாவின் 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ்' (GRESE) நிறுவனம் கட்டி வருகிறது.
- இதில் முதலாவது போர்க் கப்பலான 'அர்லானா' கடந்த ஜூன் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது போர்க் கப்பலை (ஆந்த்ராத்) இந்திய கடற்படையிடம் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தது.
- லட் சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள ஆந்த்ராத் தீவிலிருந்து இதற்கான பெயர் பெறப்பட்டுள்ளது. சுமார் 77 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல்கள், டீசல் இன்ஜின்-வாட்டர்ஜெட் கலவையால் இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர்க் கப்பல்களாகும்.
- சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவதாக நடந்த சீனியர் ஆண்களுக்கான 500 மீ பிரிவில் 43.072 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
- இதையடுத்து நடந்த ஆண்களுக்கான 1000 மீ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த குமார், ஒரு நிமிடம் 24 வினாடிகளில் (1:24.924) முதலாவதாக முடித்து தங்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார்.
- இந்த வெற்றியின் மூலம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனியர் அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரும், தமிழருமானார் ஆனந்த்குமார்.
- 2021ல் நடந்த ஜூனியர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று ஆனந்த்குமார் சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.