
15th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசின் 'தாயுமானவர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 'அன்புக்கரங்கள்' திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
- இத்திடத்தின் மூலம், அந்தக் குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- அது மட்டுமின்றி, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
- இந்த நிலையில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
- மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.
- ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு (WPI) எண்ணின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 0.52% ஆகும். ஆகஸ்ட் 2025ல் பணவீக்கத்தின் நேர்மறையான விகிதம் முதன்மையாக உணவுப் பொருட்கள், பிற உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், பிற உலோகம் அல்லாத கனிமப் பொருட்கள் மற்றும் பிற போக்குவரத்து உபகரணங்கள் போன்றவற்றின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பால் ஏற்பட்டது.
- முதன்மை பொருட்கள் (எடை 22.62%): – இந்த முக்கிய குழுவிற்கான குறியீடு ஜூலை, 2025 மாதத்திற்கான 188.0 (தற்காலிக) இலிருந்து ஆகஸ்ட், 2025 இல் 1.60% அதிகரித்து 191.0 (தற்காலிக) ஆக உயர்ந்துள்ளது. உணவு அல்லாத பொருட்களின் விலை (2.92%), கனிமங்கள் (2.66%) மற்றும் உணவுப் பொருட்களின் விலை (1.45%) ஜூலை, 2025 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட், 2025 இல் அதிகரித்துள்ளது. ஜூலை, 2025 உடன் ஒப்பிடும்போது கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை (-0.43%) ஆகஸ்ட், 2025 இல் குறைந்துள்ளது.
- எரிபொருள் மற்றும் மின்சாரம் (எடை 13.15%): இந்த முக்கிய குழுவிற்கான குறியீடு ஜூலை, 2025 மாதத்திற்கான 144.6 (தற்காலிக) இலிருந்து ஆகஸ்ட், 2025 இல் 0.69% குறைந்து 143.6 (தற்காலிக) ஆகக் குறைந்தது. ஜூலை, 2025 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட், 2025 இல் மின்சாரம் (-2.91%) மற்றும் கனிம எண்ணெய்களின் விலை (-0.07%) குறைந்துள்ளது. நிலக்கரியின் விலை முந்தைய மாதத்தைப் போலவே உள்ளது.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (எடை 64.23%): – இந்த முக்கிய குழுவின் குறியீடு ஜூலை, 2025 மாதத்திற்கான 144.6 (தற்காலிக) இலிருந்து ஆகஸ்ட், 2025 இல் 0.21% அதிகரித்து 144.9 (தற்காலிக) ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 22 NIC இரண்டு இலக்க குழுக்களில், 13 குழுக்கள் விலைகளில் அதிகரிப்பைக் கண்டன, 5 குழுக்கள் விலைகளில் குறைவைக் கண்டன, 4 குழுக்கள் விலைகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை.
- மாதந்தோறும் விலைகளில் அதிகரிப்பைக் காட்டிய சில முக்கியமான குழுக்கள் உணவுப் பொருட்களின் உற்பத்தி; ஜவுளி; மின் உபகரணங்கள்; பிற போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை. ஜூலை, 2025 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட், 2025 இல் அடிப்படை உலோகங்களின் உற்பத்தி; கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் பொருட்கள்; ஆடைகளை அணிதல்; மரம் மற்றும் மரம் மற்றும் கார்க் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றின் சில குழுக்கள் விலைகளில் குறைவைக் கண்டன.
- ஜூன் 2025 மாதத்திற்கான இறுதி குறியீடு: ஜூன் 2025 மாதத்திற்கான, ‘அனைத்து பொருட்களுக்கான’ இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் பணவீக்க விகிதம் முறையே 153.7 மற்றும் (-) 0.19% ஆக இருந்தது.
- மறுமொழி விகிதம்: ஆகஸ்ட் 2025க்கான WPI 82.1 சதவீத எடையுள்ள மறுமொழி விகிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஜூன் 2025க்கான இறுதி எண்ணிக்கை 95.2 சதவீத எடையுள்ள மறுமொழி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.
- கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு இன்று முதல் செப்.17 வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் மூன்று தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அவரது முதல் மாநாடு இதுவாகும்.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில் எல்லைப் பாதுகாப்பு, காஷ்மீர் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக முப்படைகளின் மூத்த தலைவர்களின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்தினர்.
- ஹாங்காங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லக்சயா சென்னும், சீன வீரர் லீ ஷெபெங்கும் மோதினர்.இதில் லீ ஷெபெங் 21-15, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். 2-வது இடம் பிடித்த லக்சனா சென்னுக்கு வெள்ளி கிடைத்தது.
- ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடம் பிடித்தது.
- இறுதிப் போட்டியில் சீனாவின் லியாங் வெய், வாங் சாங் ஜோடி 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சாட்விக், சிராஜ் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. 2-வது இடம்பிடித்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- சீனாவின் நிங்போ நகரில் இந்த போட்டி சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார் 233 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
- சீனாவின் பெங் ஜின்லு தங்கப் பதக்கத்தையும், நார்வேயின் ஜீனட் ஹெக் டஸ்டாட் வெள்ளியையும் வென்றனர். இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றியுள்ளது.
- வக்பு (திருத்த) சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் சட்டமாக்கப்பட்டது.
- இந்த சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விஷயங்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
- குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர் மாநில வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படலாமா? என்கிற கேள்விக்கும் நீதிமன்றம் பதிலளித்திருக்கிறது.
- நீதிமன்றம் முழு சட்டத்திற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு தடை விதித்திருக்கிறது. குறிப்பாக ஒருவர் வக்ஃப் அமைக்க இஸ்லாமிய நடைமுறையை குறைந்தது ஐந்து வருடங்கள் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையைச் சரிபார்க்க மாநில அரசுகள் விதிகளை வகுக்கும் வரை இத்தடை நீடிக்கும்.
- அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலங்கள் தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் வரை, அந்த நிலத்தை வக்ஃப் நிலமாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கான பிரிவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க அனுமதிப்பது, அதிகாரப் பிரிவினைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
- வக்ஃப் நிலத்தின் உரிமை குறித்து தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, சர்ச்சைக்குரிய வக்ஃப் நிலம் பாதிக்கப்படாது. அதே நேரத்தில், சர்ச்சை தீர்க்கப்படும் வரை அந்த நிலங்களில் எந்த மூன்றாம் தரப்பு உரிமைகளையும் உருவாக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.
- மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறது.
- அதாவது மத்திய வக்ஃப் கவுன்சிலில், 22 உறுப்பினர்களில் 4 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதேபோல, திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் பிரிவு 14 இன் கீழ் அமைக்கப்பட்ட வாரியத்தில், 11 உறுப்பினர்களில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- முஸ்லிம் அல்லாதவர் மாநில வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என்ற பிரிவில் நீதிமன்றம் தலையிடவில்லை. இருப்பினும், முடிந்தவரை, ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
- நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்குறிப்பிட்ட விஷயங்களை தங்கள் தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கின்றனர்.