//
Type Here to Get Search Results !

12th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்
  • உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று (செப்.11) வருகை தந்துள்ளார். 
  • அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
  • மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
15வது குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
  • நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். 
  • குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு ராதாகிருஷ்ணன், ஏற்கனவே மகாராஷ்டிர ஆளுநராக இருந்தார்.
  • திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றபின், ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். சதைவ் அடலில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய்க்கும், தீன்தயாள் உபாத்யாயா மார்கில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவிடத்திலும் கிசான்காட் சென்று முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கிற்கும், அவர் அஞ்சலி செலுத்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel