
25th AUGUST 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை - மத்திய அரசு அறிவிப்பு
- வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக்கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' அவசியமாகும்.
- இதன் காரணமாக தனிநபரின் கடன் தகுதியை நிர்ணயிக்கும் சிபில் ஸ்கோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
- இந்த நிலையில் முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், 'முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
- முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி நிற்னயிக்கவும் இல்லை.
- புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது.
- இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இந்தக் கூட்டணியில் நேபாளம் இணைந்திருப்பதாக ஐபிசிஏ சனிக்கிழமை அறிவித்தது.
- புலி, பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் காணப்படும் நிலப்பரப்பைக் கொண்ட நேபாளம், ஐபிசிஏ-இல் இணைந்திருப்பது பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான சா்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்தும் என ஐபிசிஏ தெரிவித்துள்ளது.
- நேபாளத்தில் கடந்த 2009-இல் வெறும் 121 புலிகள் இருந்த நிலையில், இறுதியாக 2022-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.
- ஃபிஜி பிரதமர் திரு சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
- ஃபிஜியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைப்பதற்கான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பிற்கான இந்தியா - ஃபிஜி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மருந்துகளை விநியோகிக்க எச் எல் எல் லைஃப்கேர் நிறுவனம், ஃபிஜியின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இடையே ஒப்பந்தம்.
- மனித திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியாவின் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஃபிஜியின் பசிபிக் பாலிடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகியுள்ளன.
- 2026-ம் ஆண்டில் ஃபிஜியின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியாவில் பயணம் மேற்கொள்வது, இந்திய கடற்படை கப்பல் மூலம் கடற்படையினர் 2025-ம் ஆண்டு ஃபிஜிக்கு பயணம் மேற்கொள்வது ஃபிஜி ராணுவப் படைக்கு அவசர ஊர்திகள் வழங்குதல், ஃபிஜியில் கணினிப் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்துதல் ஃபிஜி பல்கலைக்கழகத்திற்கு ஹிந்தி, சமஸ்கிருத ஆசிரியரை அனுப்புதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.