
நாகாலாந்து ஆளுநராக அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு நியமனம்
- நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் . உடல் நலக்குறைபாடு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். இதனைத் தொடர்ந்து, அந்த மாநில ஆளுநர் பதவி காலியாகி உள்ள நிலையில் மணிப்பூர் ஆளுநராக பணியாற்றி வரும் அஜய் குமார் பல்லாவுக்கு, நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- புதிய ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அஜய் குமார் பல்லா, இரண்டு மாநிலங்களிலும் மக்களின் நலனுக்காக பணி ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.