
உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு
- உறுப்புதானம் வழங்குவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்குபவரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
- இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு மட்டும் 268 பேர் உடலுறுப்பு தானம் செய்து இந்தியாவிலேயே தமிழ்நாடு ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பதில் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது.
- உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி, ஒன்றிய அரசின் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற "15-வது இந்திய உறுப்பு தான தினம் 2025" நிகழ்ச்சியில், உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, 2024-ஆம் ஆண்டிற்கான விருதினை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் மரு.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.
- மேலும், புதுதில்லியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மரு.தேரணிராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிற்கு (மரு. கோமதி கார்மேகம், மரு. ஜெயந்தி மோகனசுந்தரம், மரு. ராகவேந்திரன்) உறுப்பு தானம் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக மூளை சாவு அடைந்த நோயாளிகளை பராமரிக்கும் சிறந்த குழுவிற்கான விருது வழங்கப்பட்டது. அவ்விருதினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 12 இன்று) சென்னையில் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஒரு மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி, திட்டத்தை முறைப்படி தொடங்கினார்.
- தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
- இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. தொடர்ந்து நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- இதனிடையே, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
- நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.
- உத்தரபிரதேசத்தில் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் 1பி கட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது.
- 11.165 கி.மீ தொலைவிற்கு 7 சுரங்கப்பாதை மற்றும் 5 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன் கூடிய 12 நிலையங்களுடன் இந்த வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த 1பி கட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, லக்னோ நகரம் 34 கி.மீ தொலைவிலான மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
- லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தின் 1பி கட்டம் நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 1பி கட்டம் இந்நகரத்தில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் முக்கிய விரிவாக்கமாக உள்ளது.
- லக்னோ மெட்ரோ திட்டத்தின் 1பி கட்டம் சுமார் 11.165 கி.மீ தொலைவிலான புதிய மெட்ரோ பாதையைக் கொண்டிருக்கும். இது நகரத்தின் பழமையான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும்.
- அமினாபாத், யஹியாகஞ்ச், பாண்டேகஞ்ச், சௌக் போன்ற வணிக மையங்கள், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (மருத்துவக் கல்லூரி) போன்ற முக்கியமான சுகாதார வசதிகள், படா இமாம்பரா, சோட்டா இமாம்பரா, புல் புலையா, கடிகார கோபுரம், ரூமி தர்வாசா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள், நகரத்தின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க உணவு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைப்பதை இந்த கட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் கீழ், மேலும் நான்கு குறைக்கடத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவில் குறைக்கடத்தி சூழல் அமைப்பு வளர்ச்சியடைந்து வருகிறது. ஆறு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- சிக்செம், காண்டினென்டல் டிவைஸ் இந்திய தனியார் நிறுவனம் (சிடிஐஎல்), 3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் அட்வான்ஸ் சிஸ்டம்-இன் பேக்கேஜ் டெக்னாலாஜிஸ் ஆகிய நான்கு பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நான்கு திட்டங்களும் சுமார் ரூ.4,600 கோடி மொத்த முதலீட்டில் குறைக்கடத்தி உற்பத்தி வசதிகளை அமைக்கும். மேலும் 2034 திறமையான நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை ஊக்குவிக்கும். இதன் காரணமாக பல்வேறு மறைமுக வேலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
- இன்று இந்த நான்கு ஒப்புதல்களுடன், இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளன. 6 மாநிலங்களில் சுமார் ரூ.1.60 லட்சம் கோடி முதலீடுகளில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- தொலைத்தொடர்பு, வாகனம், தரவு மையங்கள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் தொழில்துறை மின்னணுவியல் ஆகியவற்றில் குறைக்கடத்திகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த நான்கு புதிய ஒப்புதல் அளிக்கப்பட்ட குறைக்கடத்தி திட்டங்கள் தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதற்கு கணிசமாக பங்களிப்பை வழங்கும்.
- அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8146 கோடி ஒதுக்கீட்டில் 700 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்உற்பத்தி திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (12 ஆகஸ்ட் 2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை 72 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டம் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன், அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நிறைவேற்றப்படும். இந்த மாநிலத்தின் சமபங்கு பகிர்வுக்கான மத்திய அரசு நிதியுதவி ரூ.436.13 கோடி தவிர மின்சாரம் கொண்டு செல்லப்படும் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்திற்காக ரூ.458.79 கோடி வழங்கப்படும்.