
6th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
- இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்தியா-அர்ஜெண்டினா உறவுகளுக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் திரு ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார்.