Type Here to Get Search Results !

31st JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


31st JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய கூட்டுறவு மேம்பாடு கழகத்திற்கு உதவிடும் வகையில் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2000 கோடி செலவில் "தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மத்திய அரசின் துறைசார்ந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. (நிதியாண்டு 2025-26 முதல் ஆண்டுதோறும் ரூ.500 கோடி).
  • 2025-26 நிதியாண்டு முதல் நிதியாண்டு 2028-29-ம் நிதியாண்டு வரை தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கு ரூ.2000 கோடி மானிய அடிப்படையில், வழங்கப்படும் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் நான்கு ஆண்டுகளில் வெளிச்சந்தையிலிருந்து 20,000  கோடி  ரூபாய் அளவிற்கு முதலீடு திரட்ட வகை செய்கிறது. 
  •  இந்த நிதியைக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு புதிய திட்டங்கள் / ஆலைகளை விரிவுபடுத்தும் பணிகள் மற்றும் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடனுதவிகளை வழங்கவும் பயன்படும்.
ஆறு மாநிலங்களில் நான்கு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் 4 பல் தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இதன் மொத்த செலவு மதிப்பீடு 11,169 கோடி ரூபாய் ஆகும். இடார்சி - நாக்பூர் 4-வது பாதை, அவுரங்காபாத் (சத்ரபதி சம்பாஜிநகர்) - பர்பானி இரட்டை ரயில்பாதை, அலுவாபரி சாலை- புதிய ஜல்பைகுரி 3-வது, 4-வது பாதை மற்றும் டாங்கோஅபோசி- ஜரோலி 3-வது, 4-வது பாதை ஆகிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது.
  • அதிகரிக்கப்பட்ட வழித்தடத் திறன், போக்குவரத்து வசதியை கணிசமாக அதிகரிக்கும். இதன் விளைவாக ரயில்வேயின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும். இந்த பல்தட திட்டங்கள் நெரிசலைக் குறைக்கும். இந்தத் திட்டங்கள் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும்.
  • மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த 4 திட்டங்கள், ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பை சுமார் 574 கிலோ மீ்ட்டர் அதிகரிக்கும்.
  • முன்மொழியப்பட்ட பல்தடத் திட்டம், சுமார் 43.60 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சுமார் 2,309 கிராமங்களுக்கான ரயில் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும். 
  • நிலக்கரி, சிமெண்ட், கிளிங்கர், ஜிப்சம், விவசாயப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்தை இத்திட்டம் எளிதாக்கும்.  ஆண்டுக்கு 95.91 மில்லியன் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து சாத்தியமாகும்.
பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)க்கு ரூ.1920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 15வது நிதி ஆணைய சுழற்சியில் (FCC) (2021-22 முதல் 2025-26 வரை) நடைபெற்று வரும் மத்திய துறை திட்டமான "பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா" (PMKSY)-க்கு ரூ.1920 கோடி கூடுதல் ஒதுக்கீடு உட்பட ரூ.6520 கோடி மொத்த ஒதுக்கீட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு (ICCVAI) என்ற கூறு திட்டத்தின் கீழ் 50 பல்பொருள் உணவு கதிர்வீச்சு அலகுகள் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) இன் கூறு திட்டத்தின் கீழ் NABL அங்கீகாரத்துடன் கூடிய 100 உணவு சோதனை ஆய்வகங்கள் (FTLs) அமைப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.1000 கோடியும், பட்ஜெட் அறிவிப்புக்கு ஏற்ப பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) இன் உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி உள்கட்டமைப்பு (FSQAI) என்ற கூறு திட்டத்தின் கீழ் ரூ.920 கோடியும் அடங்கும். 
  • 15வது FCC இன் போது PMKSY இன் பல்வேறு கூறு திட்டங்களின் கீழ் திட்டங்களை அனுமதிப்பதற்காக ரூ.920 கோடியும்.
  • ICCVAI மற்றும் FSQAI இரண்டும் PMKSY இன் தேவை சார்ந்த கூறு திட்டங்களாகும். நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்காக ஆர்வ வெளிப்பாடு (EOIs) வெளியிடப்படும். 
  • EOIக்கு எதிராகப் பெறப்பட்ட திட்டங்கள், தற்போதுள்ள திட்ட வழிகாட்டுதல்களின்படி தகுதி அளவுகோல்களின்படி முறையான ஆய்வுக்குப் பிறகு அங்கீகரிக்கப்படும்.
  • முன்மொழியப்பட்ட 50 பல்பொருள் உணவு கதிர்வீச்சு அலகுகளை செயல்படுத்துவது, இந்த அலகுகளின் கீழ் கதிர்வீச்சு செய்யப்படும் உணவுப் பொருட்களின் வகையைப் பொறுத்து, ஆண்டுக்கு 20 முதல் 30 லட்சம் மெட்ரிக் டன் (LMT) வரை மொத்த பாதுகாப்பு திறனை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த
  • னியார் துறையின் கீழ் NABL-அங்கீகாரம் பெற்ற 100 உணவு சோதனை ஆய்வகங்களை அமைப்பது, உணவு மாதிரிகளை பரிசோதிப்பதற்கான மேம்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுக்கும், இதன் மூலம் உணவு பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்குவதையும் பாதுகாப்பான உணவுகளை வழங்குவதையும் உறுதி செய்யும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel