
28th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு
- மத்திய அரசு இணைய அடிப்படையிலான C-வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பிற்கான வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெள்ளப்பெருக்கு வரைபடங்கள் மற்றும் நீர் மட்ட கணிப்புகள் வடிவில் கிராமங்கள் வரை கிடைக்கக் கூடிய இரண்டு நாட்களுக்கு முன்கூட்டிய வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புகளை வழங்குகிறது.
- C-வெள்ள வலைதளம் மேம்பட்ட இரு பரிமாண ஹைட்ரோடைனமிக் மாடலிங் மூலம் பெறப்பட்ட வெள்ளப்பெருக்கு வெளியீட்டுத் தகவலை விரிவான முறையில் ஆழமான நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
- அனைத்து நதிப் படுகைகளுக்கான தேசிய மற்றும் பிராந்திய நிறுவனங்களின் வெள்ள மாதிரி வெளியீடுகளை அந்தந்த செயல் திட்டங்களின்படி ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த வெள்ளப்பெருக்கு தகவல் அமைப்பாக இது செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கோதாவரி, தபி மற்றும் மகாநதி நதிப் படுகைகளுக்கான வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புகளை உள்ளடக்கியது.
- இந்த வலை தளம் ஆரம்ப கட்டத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒடியா ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும்.
- இதில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பும் அடங்கும். இது கிராமங்கள் வரையிலான வெள்ளப்பெருக்கு தகவல்களைக் வழங்குகிறது.
- உலகக் கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா தேஷ்முக் முன்னேறினார்.
- இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். இதன்மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றர்.