
20th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இமாச்சலப் பிரதேசத்தில் பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு
- மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், அடைமழை ஆகிய பேரிடர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI), புனே இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), இந்தூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட பல்துறை மத்திய குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.
- மேலும், இந்த ஆண்டு (2025) தென்மேற்கு பருவமழையின் போது இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, சேதங்களை நேரில் மதிப்பீடு செய்வதற்காக, மத்திய அரசு ஏற்கனவே அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு மத்தியக் குழுவை (IMCT) முன்கூட்டியே அனுப்பியுள்ளது. இந்தக் குழு 2025 ஜூலை 18 முதல் 21 வரை மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறது.