தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் 2024 / CLEANEST CITIES IN INDIA 2024
TNPSCSHOUTERSJuly 20, 2025
0
தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் 2024 / CLEANEST CITIES IN INDIA 2024: மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் தூய்மை இந்தியா கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
2024-இல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேரடி ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசை வழங்கப்படுகிறது. தரவரிசை வழங்க ஆய்வுமேற்கொள்ள இப்சோஸ் என்ற நிறுவனத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை, மத்திய பிரதேச மாநிலம் இந்தூா், சத்தீஸ்கா் மாநிலம் அம்பிகாபூா், கா்நாடக மாநிலம் மைசூரு ஆகியவை பிடித்துள்ளன.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை நகரங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத், 3 முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மத்திய பிரதேசம் உஜ்ஜயினி, 1 முதல் 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உத்தரபிரதேசம் ஓரை நகரமும் முதலிடம் பிடித்துள்ளன.
தமிழக அளவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்தல் வகையில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் இவ்விருதை பெற்றனா்.
ENGLISH
CLEANEST CITIES IN INDIA 2024: The Swachh Bharat Abhiyan is conducted annually in cities across India by the Union Ministry of Housing and Urban Affairs.
In 2024, the data collected under the Solid Waste Management Scheme is verified through direct inspection and scores and rankings are given. The Central Government has appointed Ipsos to conduct the research and provide the rankings.
At the national level, Indore in Madhya Pradesh, Ambikapur in Chhattisgarh, and Mysore in Karnataka have topped the list of cleanest cities.
Among cities with a population of more than 10 lakhs, Ahmedabad in Gujarat, Ujjain in Madhya Pradesh, and Orai in Uttar Pradesh have topped the list of cities with a population of 3 to 10 lakhs.
Namakkal Corporation has topped the list of cities with a population of 1 to 3 lakhs in Tamil Nadu in terms of segregation of biodegradable and non-biodegradable waste.
Namakkal Municipal Corporation has topped the list of cleanest cities in Tamil Nadu and has received the Central Government’s ‘Swachh Charveshan-2024’ award. The award was received by the Corporation Mayor D.Kalanidhi and Deputy Mayor S.Bhupathi at a ceremony held in New Delhi.