
9th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
- மாநில திட்டக் குழுவானது முதலமைச்சர் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்வதிலும், அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்டக் குழு நல்கி வருகிறது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (9.6.2025) தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 1) தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள் 2) நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் 3) தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம் 4) அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
- நேஷன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது போர்ச்சுகல். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2 - 2 கோல் கணக்கில் சமன் செய்ததால் பெனால்டி ஷூட் நடைபெற்றது.
- அதில் 5 கோல்களை அடித்து 5 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது போர்ச்சுகல். அதில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 138-ஆவது சர்வதேச கோல் ஒன்றும் அடங்கும்.
- இந்த கொண்டாட்டத்தில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து திடலில் ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்வையாளர்களை நெகிழச் செய்தது.
- இதன் மூலம் நேஷன்ஸ் லீக் கோப்பையை போர்ச்சுகல் இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி (ஜுன் 8) நடந்தது.
- இந்த போட்டியில், ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (வயது 22) மற்றும் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர் (வயது 23) ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய சின்னர் 2 செட்களை கைப்பற்றினார்.
- இதனையடுத்து, அதிரடி காட்டிய அல்காரஸ் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து, 5வது செட்டை நோக்கி ஆட்டம் சென்றது.
- அதில், இருவரும் வெற்றி பெற தீவிரம் காட்டினர். இறுதியில், 4-6, 6-7 (4), 6-4, 7-6 (3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி, கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டியில் சின்னர் தோல்வி அடைவது இதுவே முதன்முறையாகும். இந்த போட்டி 5 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இதுவே நீண்ட நேரம் நடைபெற்ற இறுதி போட்டியாகும்.