Type Here to Get Search Results !

22nd JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ 19.14 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) ஏப்ரல் 2025-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 19.14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மார்ச் 2025-ஐ விட 31.31% அதிகமாகும். 
  • ஆண்டு பகுப்பாய்வின்படி, ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடும்போது நிகர சேர்க்கை 1.17% அதிகரித்துள்ளது. இது இபிஎஃப்ஓ-வின் பயனுள்ள மக்கள் தொடர்பு முயற்சிகளாலும், அதிகரித்த வேலைவாய்ப்புகளாலும் ஏற்பட்டுள்ளது.
  • 18 முதல் 25 வயதுப் பிரிவில் 4.89 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் 2025-ல் சேர்க்கப்பட்ட மொத்த புதிய சந்தாதாரர்களில் 57.67% ஆகும். 18-25 வயதுப் பிரிவில் புதிய சந்தாதாரர்கள் மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது 10.05% அதிகமாகும்.
  • முன்னர் வெளியேறிய சுமார் 15.77 லட்சம் உறுப்பினர்கள் ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ-வில் மீண்டும் இணைந்தனர். இந்த எண்ணிக்கை மார்ச் 2025 ஐ விட 19.19% அதிகமாகும்.
  • ஏப்ரல் 2025 இல் சுமார் 2.45 லட்சம் புதிய பெண் சந்தாதாரர்கள் இணைந்தனர். இது மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது 17.63% அதிகரிப்பை எடுத்துக் காட்டுகிறது.
  • 2025 ஏப்ரல் மாதத்தில் நிகர பெண்கள் சேர்க்கை சுமார் 3.95 லட்சமாக இருந்தது. மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது இது 35.24% அதிகமாகும்.
  • ஏப்ரலில் மகாராஷ்டிரா 21.12% பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் அதிக எண்ணிக்கையில் இபிஎஃப்ஓ சேர்க்கையில் பங்களித்துள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel