
20th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பீகார் மாநிலம் சிவானில் ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்
- பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- பிராந்தியத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் ரூ.400 கோடிக்கு மேல் மதிப்புள்ள புதிய வைஷாலி-தியோரியா ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மர்ஹோவ்ரா ஆலையில் கட்டப்பட்ட அதிநவீன ரயில் என்ஜினையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பிராந்தியத்தில் மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பீகாரில் 500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு திறனுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
- பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள 53,600க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல் தவணையையும் பிரதமர் வெளியிட்டார்.
- விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளன. மே மாதத்திற்கான குறியீடுகள் முறையே 1305 மற்றும் 1319 புள்ளிகளாக உள்ளது.
- ஆண்டுதோறும் பணவீக்க விகிதங்கள் முறையே 2.84% மற்றும் 2.97% ஆக பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் முறையே 7.00% மற்றும் 7.02% ஆக இருந்தது. 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த பணவீக்க விகிதம் முறையே 3.48% மற்றும் .53% ஆகவும் இருந்தன.
- மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வழங்கப்படுகிறது.
- 2024–25-ம் நிதியாண்டிற்கான செயல்திறன் குறியீட்டில் நாட்டில் உள்ள பேமெண்ட்ஸ் வங்கிகளில் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி முதல் இடத்தைப் பிடித்து இந்த விருதைப் பெற்றுள்ளது.
- இந்த வங்கியின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் காகிதப் பயன்பாடற்ற டிஜிட்டல் முறையிலான சேவைகளை எளிதாகவும் பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.