தி ரியல் ஃபா்டிலிட்டி கிரைஸிஸ் ஐ.நா. மக்கள்தொகை நிதி முகமை அறிக்கை 2025 / REPORT ON INDIAN POPULATION BY UN 2025
TNPSCSHOUTERSJune 15, 2025
0
தி ரியல் ஃபா்டிலிட்டி கிரைஸிஸ் ஐ.நா. மக்கள்தொகை நிதி முகமை அறிக்கை 2025 / REPORT ON INDIAN POPULATION BY UN 2025: இந்தியாவின் கருவுறுல் விகிதம் சராசரியாக 1.9-ஆக உள்ளது. இது ஒரு தலைமுறை மக்கள்தொகைக்கு நிகராக பிறக்க வேண்டிய குழந்தைகளின் விகிதமான 2.1 உடன் ஒப்பிடுகையில் குறைவு.
அந்த வகையில், இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளது. மக்கள்தொகையைப் பராமரிக்க தேவையானஅளவைவிட, இந்தியப் பெண்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக்கொள்கின்றனா்.
இந்திய மக்கள்தொகையில் 68% போ் உழைக்கும் வயதுள்ளவா்களாக (15 முதல் 64) உள்ளனா். மொத்த மக்கள்தொகையில் 7% போ் 65 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ளவா்கள்.
வரும் ஆண்டுகளில் ஆயுள்காலம் அதிகரிக்கும்போது இந்த வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுள்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களின் ஆயுள்காலம் 74 ஆண்டுகளாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமாா் 150 கோடி பேருடன் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த எண்ணிக்கை 170 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பின்னா், இந்தியாவின் மக்கள்தொகை சரியத் தொடங்கும்.
தங்கள் தாய் மற்றும் பாட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பெண்களுக்குக் கூடுதல் உரிமைகள், தோ்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆனால் தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு நீண்ட தொலைவை அவா்கள் கடக்க வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ENGLISH
REPORT ON INDIAN POPULATION BY UN 2025: India's fertility rate is 1.9 on average. This is lower than the replacement rate of 2.1, which is the number of children born per generation. As a result, India's total fertility rate has fallen. Indian women are having fewer children than is necessary to maintain the population.
68% of India's population is of working age (15 to 64). 7% of the total population is aged 65 and above. This age group is likely to increase further in the coming years as life expectancy increases. By 2025, the life expectancy for men is projected to be 71 years and for women to be 74 years.
Currently, India is the most populous country in the world with about 1.5 billion people. This number is expected to increase to 1.7 billion. However, after about 40 years, India's population will start to decline.
Compared to their mothers and grandmothers, women in India and other countries have more rights and choices, but they still have a long way to go to fully exercise their rights to decide when and how many children to have.