
2nd MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள விழிஞஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒருங்கிணைந்த தொலைநோக்கின் ஒரு பகுதியாக இந்தியாவின் கடல்சார் துறையில் செய்யப்படும் மாற்றத்தக்க முன்னேற்றங்களைக் குறிக்கும் நாட்டின் முதல் பிரத்யேக கொள்கலன் கையாளும் துறைமுகமாகும்.
- ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் விஎம், இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக 2025, மே 02 அன்று பொறுப்பேற்றார்.
- ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து, கடக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார்.
- விமானப்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன், தென்மேற்கு விமானப்படை காமாண்டில் கமாண்டிங்-இன்-சீஃப் ஆக இருந்தார்.
- இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 2025-ம் ஆண்டு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் (பிவிஎஸ்எம்), 2022-ம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (ஏவிஎஸ்எம்) 2008-ம் ஆண்டு வாயு சேனா பதக்கம் (விஎம்) ஆகிய குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன.