Type Here to Get Search Results !

உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு 2025 / HUMAN DEVELOPMENT INDEX 2025

  • உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு 2025 / HUMAN DEVELOPMENT INDEX 2025: ஐ.நா அறிக்கை உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) தொடர்ந்து பலவீனமடைந்து வருவதையும், 1990க்குப் பிறகு ஏற்பட்ட மிகக் குறைந்த அதிகரிப்பு இது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
  • குறிப்பாக, 2020-2021 ஆம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று போன்ற கடுமையான நெருக்கடி காலங்களைக்கூட இந்த மோசமான நிலை ஒப்பிடும்போது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • UNDP வெளியிட்டிருக்கும் "2025 மனிதவள மேம்பாட்டு அறிக்கை," தேர்வின் விவரங்கள்: செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மக்களும் சாத்தியக்கூறுகளும்" என்ற தலைப்பில், இந்த எதிர்பாராத தேக்கநிலையின் காரணங்களையும், வளர்ச்சியை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலையும் விரிவாக ஆராய்கிறது.

பலவீனமான முன்னேற்றம்

  • உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு 2025 / HUMAN DEVELOPMENT INDEX 2025: கொடிய நோய்த் தொற்றுக்கு பிறகு ஒரு நிலையான மற்றும் வலுவான மீட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களின் நல்வாழ்வின் முக்கிய அம்சங்களான சுகாதாரம், கல்வி மற்றும் வருமானம் ஆகியவற்றில் கவலை அளிக்கும் வகையில் பலவீனமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) 2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் தேக்கமடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
  • இந்த மந்தநிலை, 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் மிக உயர்ந்த மனிதவள மேம்பாட்டை எட்ட வேண்டும் என்ற நீண்டகால இலக்கை கேள்விக்குறியாக்குவது மட்டுமல்லாமல், உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வையும் தீவிரப்படுத்துகிறது.
  • மக்களின் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, கல்வி பெறும் நிலை, வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து, நாடுகளின் மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலை ஐ.நா. வளா்ச்சித் திட்டம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
  • தற்போது வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 0.685 புள்ளிகளுடன் 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  • சமத்துவமின்மை இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பை 30.7 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது தெற்காசிய பிராந்தியத்தில் அதிகபட்ச இழப்புகளில் ஒன்றாகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • சுகாதாரம் மற்றும் கல்வி சமத்துவமின்மை மேம்பட்டிருந்தாலும், வருமானம் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை. தொழிலாளா் பங்களிப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெண்கள் பின்தங்கியுள்ளனா்.
  • எனினும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் மாற்றத்திற்கான உறுதியை அளிக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரி ஆயுள்காலம் அதிகரிப்பு

  • உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு 2025 / HUMAN DEVELOPMENT INDEX 2025: இந்தியாவில் மனித சராசரி ஆயுள்காலம் 71.7 ஆண்டுகளில் இருந்து 72.0 ஆண்டுகளாக சற்று அதிகரித்துள்ளது. 
  • இது குறியீட்டின் வரலாற்றில் பதிவான இந்தியாவின் அதிகபட்ச அளவாகும். இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டங்கள் இந்தச் சாதனைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன.
  • இந்தியாவின் எதிா்பாா்க்கப்பட்ட சராசரி பள்ளி படிப்பு காலம் 12.95 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது 6.88 ஆண்டுகளாக உள்ளது. பள்ளிக் கல்வியில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ள ஐ.நா., கல்வி உரிமைச் சட்டம், தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றை இதற்கு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கல்வித் தரம் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனிநபா் வருமானம் உயா்வு

  • உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு 2025 / HUMAN DEVELOPMENT INDEX 2025: இந்தியாவின் தேசிய தனிநபா் வருமானம், நாட்டின் தற்போதைய பொருளாதார வளா்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் 8,475.68 டாலரிலிருந்து 9,046.76- ஆக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் வளா்ச்சி

  • உலக மனிதவள மேம்பாட்டு குறியீடு 2025 / HUMAN DEVELOPMENT INDEX 2025: இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 1990-ஆம் ஆண்டு முதல் 53 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியா உலகளாவிய மற்றும் தெற்காசிய சராசரிகளைவிட வேகமாக வளா்ந்து வருகிறது.
  • 1990-இல் 58.6 ஆண்டுகளாக இருந்த மனித சராசரி ஆயுள்காலம் 2023-இல் 72 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக, இந்தியாவின் தேசிய தனிநபா் வருமானம் 1990-இன் 2,167.22 டாலரிலிருந்து 2023-இல் 9,046.76-ஆக நான்கு மடங்கு உயா்ந்துள்ளது.

ENGLISH

  • HUMAN DEVELOPMENT INDEX 2025: The UN report points out that the global Human Development Index (HDI) continues to weaken, with the lowest increase since 1990. 
  • Notably, this worsening situation has been reported to have had a relatively minor impact compared to severe crises such as the 2020-2021 COVID-19 pandemic.
  • The UNDP's "Human Development Report 2025," titled "Details of the Choice: People and Possibilities in the Age of Artificial Intelligence (AI), examines in detail the reasons for this unexpected stagnation and the potential of artificial intelligence (AI) to revive growth.

Weak progress

  • HUMAN DEVELOPMENT INDEX 2025: While a steady and strong recovery was expected after the pandemic, the report points to worryingly weak progress in key dimensions of people's well-being - health, education and income.
  • The report also found that the Human Development Index (HDI) stagnated in all regions around the world in 2024.
  • This slowdown not only calls into question the long-term goal of achieving the highest human development by 2030 but also widens the economic gap between the world's richest and poorest countries.
  • The HDI ranks countries based on three key factors: long-term health, educational attainment and quality of life. The UN Development Programme publishes the annual Human Development Index.
  • India's Human Development Index has improved by 0.685 points to 130th place in the current year's ranking. Inequality has reduced India's Human Development Index score by 30.7 percent. This is one of the highest losses in the South Asian region, the report said.
  • While health and education inequalities have improved, income and gender disparities have not changed significantly. Women remain lagging behind in labor force participation and political representation.
  • However, recent steps such as the constitutional amendment to reserve one-third of the seats in the Lok Sabha and state assemblies for women provide a sense of hope for change, the report said.

Increase in average life expectancy

  • HUMAN DEVELOPMENT INDEX 2025: The average life expectancy in India has increased slightly from 71.7 years to 72.0 years. This is the highest level recorded in India in the history of the index. The Indian government's national health programmes have contributed significantly to this achievement.
  • India’s expected average schooling years are 6.88 years, down from 12.95 years. The UN has praised India’s progress in school education, citing the Right to Education Act and the National Education Policy as reasons for this. However, it has been emphasized that continued attention should be paid to the quality of education and learning outcomes.

Rising per capita income

  • HUMAN DEVELOPMENT INDEX 2025: India’s national per capita income has increased from $8,475.68 to $9,046.76, reflecting the country’s ongoing economic growth.

India’s growth

  • HUMAN DEVELOPMENT INDEX 2025: India’s Human Development Index has increased by more than 53 percent since 1990. India is growing faster than the global and South Asian averages.
  • The average life expectancy has increased from 58.6 years in 1990 to 72 years in 2023. Economically, India's national per capita income has quadrupled from $2,167.22 in 1990 to $9,046.76 in 2023.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel