இந்தியாவில் தாய் - சேய் இறப்பு விகிதம் 2021 / MATERNAL AND INFANT MORTALITY RATE IN INDIA 2021
TNPSCSHOUTERSMay 12, 2025
0
இந்தியாவில் தாய் - சேய் இறப்பு விகிதம் 2021 / MATERNAL AND INFANT MORTALITY RATE IN INDIA 2021: இந்தியா தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2025 மே 07 அன்று இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்ட இது தொடர்பான அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
தாய் - சேய் இறப்பு விகிதக் குறைப்பில் 2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் பேறுகால இறப்பு தொடர்பான அறிக்கை 2019-21-ன் படி, நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2014–16-ம் ஆண்டில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 130 என இருந்த இந்த விகிதம் 2019–21-ம் ஆண்டில் 93 ஆகக் குறைந்துள்ளது.
இதேபோல், புள்ளிவிவர அறிக்கை 2021-ன் படி, குழந்தை இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 39 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்துள்ளது.
பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கும் விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்துள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2014-ல் 1000 பேருக்கு 45 ஆக இருந்தது, 2021-ல் இது 1000 பேருக்கு 31 ஆகக் குறைந்துள்ளது. பாலின விகிதம் 2014-ல் 899 ஆக இருந்தது. 2021-ல் இது 913 ஆக உயர்ந்துள்ளது.
தாய்- சேய் இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளது. 1990 முதல் 2023 வரையிலான 33 ஆண்டுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா 78% வீழ்ச்சியை அடைந்துள்ளது.
இது உலகளாவிய வீழ்ச்சியான 61% என்பதை விட சிறந்த செயல்பாடாக உள்ளது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகித வீழ்ச்சியில் உலக அளவில் 54% வீழ்ச்சி என்பதை ஒப்பிடும்போது இந்தியாவில் 70% வீழ்ச்சி உள்ளது.
ENGLISH
MATERNAL AND INFANT MORTALITY RATE IN INDIA 2021: India has seen significant improvement in maternal and child health indicators. This has been revealed in a report released by the Registrar General of India on May 07, 2025. India has made good progress in achieving the Sustainable Development Goals for 2030 in reducing maternal and child mortality.
According to the Maternal Mortality Report in India 2019-21, the maternal mortality ratio in the country has declined significantly. This ratio has come down to 93 per lakh live births from 130 in 2014-16.
Similarly, according to the Statistical Report 2021, the infant mortality rate has also continued to decline. The infant mortality rate in the country was 39 per 1000 live births in 2014. In 2021, it has come down to 27 per 1000 live births.
The infant mortality rate was 26 per 1000 live births in 2014. It has come down to 19 per 1000 live births in 2021. The under-five mortality rate was 45 per 1000 live births in 2014, and it has come down to 31 per 1000 live births in 2021. The sex ratio was 899 in 2014. It has increased to 913 in 2021.
India’s progress in reducing maternal and child mortality rates is higher than the global average. In the 33 years from 1990 to 2023, India has achieved a 78% reduction in the under-five mortality rate. This is better than the global reduction of 61%. India has seen a 70% reduction in the neonatal mortality rate, compared to a global reduction of 54%.