
10th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.05.2025) புதுதில்லியில், 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
- மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலானது. எல்லையில் இருநாட்டு முப்படைகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.