
4th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
- தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
- உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது" என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.
- மியான்மரிலும், தாய்லாந்திலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) இந்திய ராணுவமும் 2025 ஏப்ரல் 03 & 04-ம் தேதிகளில், ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் நடுத்தர ஏவுகணைச் சோதனைய வெற்றிகரமாக நடத்தின.
- நான்கு செயல்பாட்டு விமானச் சோதனைகள் அதிவேக வான் இலக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் வான் இலக்குகளைத் தடுத்து அவற்றை அழித்து, நேரடித் தாக்குதலைப் பதிவு செய்தன.
- நீண்ட தூரம், குறுகிய தூரம், அதிக உயரம் மற்றும் குறைந்த உயரத்தில் நான்கு இலக்குகளைத் தடுத்து நிறுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- ஆயுத அமைப்பு செயல்பாட்டு நிலையில் இருந்தபோது விமானச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தால் பயன்படுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் போன்ற தூர கருவிகளால் கைப்பற்றப்பட்ட விமானத் தரவு மூலம் ஆயுத அமைப்பின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது.
- டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விமானச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- விமானப் பொருட்களின் நலன் பாதுகாப்பு மசோதா 2025 நாடாளுமன்றத்தில் 03.04.2025 அன்று நிறைவேறியது. விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு அறிமுகம் செய்த இந்த மசோதா, ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இரு அவைகளிலும் இது நிறைவேற்றப்பட்டிருப்பது விமானப் போக்குவரத்து துறையில் இரண்டாவது பெரிய சீர்திருத்தமாக உள்ளது. இந்திய விமானங்களைக் குத்தகைக்கு விடுவது, விமானங்களுக்கு நிதியுதவி செய்யும் சூழல் ஆகியவற்றை உலக தரத்துடன் இணைப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும்.
- அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் விமானச் சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் இது முக்கியமான நடவடிக்கையாகும்.
- கேப் டவுன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க நாட்டின் விமான குத்தகை நடைமுறையை எளிதாக்க இந்த மசோதா உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும் விமானப் போக்குவரத்து துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் இது பயன்படும். விமானப் போக்குவரத்து செலவை குறைப்பது, இந்த துறையில் புதியவர்கள் நுழைவதை ஊக்குவிப்பது போன்றவற்றிற்கும் இந்த மாற்றங்கள் முக்கியமானதாகும்.
- மாநிலங்களவையில் வியாழக்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா ஏப். 4 அதிகாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
- முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, சுமாா் 12 மணி நேர விவாதத்துக்கு பிறகு புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.
- இந்த நிலையில், மாநிலங்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (04.04.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பான, துடிப்பான நில எல்லைகள்' என்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (VVP-II) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மத்திய அரசின் திட்டமாக 100% மத்திய அரசின் நிதியுதவியுடன் இது செயல்படுத்தப்படும். 6,839 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2028-29 நிதியாண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் மொத்தம் 18,658 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த நான்கு திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வே கட்டமைப்பை சுமார் 1247 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.