
3rd APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
- தாய்லாந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் மேதகு திரு பத்ரோடன் ஷினவத்ராவை இன்று பாங்காக் நகரில் சந்தித்தார். அரசு இல்லம் சென்றடைந்த பிரதமரை திரு ஷினவத்ரா வரவேற்று சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.
- இது அவர்களின் இரண்டாவது சந்திப்பாகும். முன்னதாக, 2024 அக்டோபரில் வியன்டியானில் நடைபெற்ற ஆசியான் தொடர்பான உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.
- இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
- இந்தியா-தாய்லாந்து உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
- டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக தாய்லாந்து அரசின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துக்கும் இந்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தாய்லாந்து அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நுண்கலைத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய அரசின் தேசிய சிறு தொழில்கள் கழகத்துக்கும், தாய்லாந்து அரசின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு அலுவலகத்துக்கும் இடையே குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய அரசின் வடகிழக்கு கைவினைப்பொருட்கள், கைத்தறி மேம்பாட்டுக் கழகத்துக்கும் தாய்லாந்து அரசின் படைப்பாற்றல் பொருளாதார நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐந்து மாநிலங்களில் ஊரக வளர்ச்சியை ஊக்கப்படுத்த 15-வது நிதி ஆணையத்தின் ரூ. 1,440 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது
- 2024-25 நிதியாண்டின் அருணாச்சலப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கும் 15-வது நிதி ஆணையத்தின் ரூ. 1,440 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- இந்த மானியங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு தவணைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை) ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகிறது.
- இதன்படி, 2024-25 நிதியாண்டின் முதல் தவணையாக ஒருங்கிணைந்த மானியம் மத்திய பிரதேசத்திற்கு ரூ.651.7794 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு ரூ.508.6011 கோடியும், 2022-23 நிதியாண்டின் முதல் தவணையாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.35.40 கோடியும், நாகாலாந்து மாநிலத்திற்கு ரூ. 19.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநிலத்திற்கு 2024-25-ம் நிதியாண்டின் 2-ம் தவணையாக ரூ.225.975 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ரா கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவி காலியாக இருந்தது.
- இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தாவை நியமிப்பதற்கு நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- பூனம் குப்தா தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின்(என்சிஏஇஆர்) இயக்குனர் ஜெனரலாக உள்ளார்.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் மற்றும் 16வது நிதி கமிஷனுக்கான ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
- வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய பூனம் குப்தா கடந்த 2021ல் என்சிஏஇஆர்-ல் அவர் சேர்ந்தார்.
- மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார்.
- இதையடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மணிப்பூரில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அவையில் அஞ்சலியும், அனுதாபமும், ஆழ்ந்த வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.
- வக்ஃப் திருத்த சட்ட மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்து.இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த சட்டத்தை பரிசீலிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டது.
- இதனையடுத்து கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வின் போது எதிர்கட்சிகள் கொடுத்த திருத்தம் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு மீண்டும் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
- இதனையடுத்து எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்காக அவை நள்ளிரவு வரை நடைபெற்றது.
- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பதிலுக்குப் பிறகு, சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் முடிவிற்காக பட்டியலிடப்பட்ட வணிகத்தில் உள்ள உருப்படி எண் 12 - வக்பு (திருத்த) மசோதா, 2025 - எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார்.
- மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பின்னர் "திருத்தங்களுக்கு உட்பட்டு, இந்த மசோதாவிற்கு ஆதரவு 288, எதிர்ப்பு 232. பேரும் வாக்களித்தனர்.