
29th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
- இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது.
- ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- 2024 ஆம் ஆண்டில் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ரூ.153.36 கோடி கூடுதல் மத்திய உதவியை வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எஃப்)பெறப்படும் இந்த உதவி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் (எஸ்டிஆர்எஃப்) கிடைக்கும் ஆண்டிற்கான தொடக்க நிலுவையில் 50% சரிசெய்தலுக்கு உட்பட்டது.
- இந்தக் கூடுதல் உதவி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ள நிதிக்கும் மேலானதாகும்.
- 2024-25 நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் வழங்கியுள்ளது.
- கூடுதலாக, மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல், 2025-26 நிதியாண்டில், மத்திய அரசு எஸ்டிஆர்எஃப் இன் கீழ் ரூ.895.60 கோடியையும், என்டிஆர்எஃப் இன் கீழ் ரூ.929.633 கோடியையும் 07 மாநிலங்களுக்கு இதுவரை வழங்கியுள்ளது.