
26th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வலுக்கட்டாய கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டசபையில் அறிமுகம்
- தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
- கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. பிணையில் வெளிவர முடியாது. வலுக்கட்டாய கடன் வசூலால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.
- கடன் பெற்றவரையோ அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.
- கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் என்ற புதிய மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.