
25th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
- சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.
- அப்போது பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.
- மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து அதன் மூலமாக வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.
- இதேபோல் இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ்அப் செயலி மூலமாக ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிடிஆர் கூறினார்.