மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வு 2025 / WORLDWIDE REPORT ON POWER GENERATION 2025
TNPSCSHOUTERSApril 11, 2025
0
மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வு 2025 / WORLDWIDE REPORT ON POWER GENERATION 2025: உலகம் முழுவதும் 215 நாடுகளின் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு சர்வதேச அளவிலான மின் உற்பத்தியில் 41 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
இது வரவேற்கத்தக்கது. இதன்படி சர்வதேச அளவில் நீர்மின் நிலையங்கள் மூலம் 14%, அணு சக்தி மூலம் 9%, காற்றாலைகள் மூலம் 8%, சூரிய மின் கட்டமைப்புகள் மூலம் 7%, இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 3% மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சர்வதேச அளவிலான காற்று, சூரிய மின் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவின் மொத்த உற்பத்தியில் 82 சதவீத மின்சாரம், காற்றாலை, சூரிய மின் கட்டமைப்புகள், நீர் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த நாட்டில் நிலக்கரி மூலம் 18% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவிலான காற்று, சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 78% நிலக்கரி உள்ளிட்ட புதைபடிமங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 22% காற்றாலைகள், சூரிய மின் கட்டமைப்புகள், அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ENGLISH
WORLDWIDE REPORT ON POWER GENERATION 2025: A comprehensive study was conducted on the electricity production of 215 countries around the world. According to this, 41 percent of the electricity produced globally last year was generated by nuclear power and renewable energy sources.
According to this, 14% of the electricity produced globally was generated by hydropower plants, 9% by nuclear power, 8% by wind power plants, 7% by solar power structures, and 3% by other renewable energy sources.
China tops the list of countries that consume the most electricity. The United States, the European Union, India, Russia, Japan, and Brazil are in the next places. China tops the list of countries that consume the most electricity.
82 percent of China's total electricity is generated by wind power plants, solar power structures, hydroelectric power plants, and nuclear power plants. 18% of electricity is generated by coal in that country.
India's solar power production and wind power production have doubled in the last 5 years. India has surpassed Germany to move to the 3rd place in the global wind and solar power production. 78% of India's total electricity generation is generated from fossil fuels, including coal.
The remaining 22% is generated from renewable energy sources, including wind farms, solar power plants, and nuclear power plants.