Type Here to Get Search Results !

தமிழக அரசு சிறந்த திருநங்கை விருது 2025 / TAMILNADU BEST TRANSGENDER AWARD 2025

  • தமிழக அரசு சிறந்த திருநங்கை விருது 2025 / TAMILNADU BEST TRANSGENDER AWARD 2025: திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாக 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 'சிறந்த திருநங்கை' விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த விருதானது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு, சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. 
  • சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவால் தேர்வு செய்யப்படும் இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி விருது வழங்கப்படுகிறது. விருதாளருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சேவை மற்றும் சாதனைகளை பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது.
  • அந்த வகையில், தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.ரேவதியின், சிறந்த சமூக சேவையைப் பாராட்டியும், திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க.பொன்னியின் சிறந்த சமூக பங்களிப்பைப் பாராட்டியும், தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையர் ஆர்.லில்லி ஆகியோர் பங்கேற்றனர்.

ENGLISH

  • TAMILNADU BEST TRANSGENDER AWARD 2025: The Tamil Nadu government is implementing various welfare schemes for the upliftment of the livelihood of transgenders. The 'Best Transgender' award has been presented every year since 2021 to recognize and celebrate them as important contributors to society.
  • This award is given to a transgender person who has worked tirelessly for the welfare of transgenders and has become a role model in the society. 
  • The awardee, who is selected by a special committee headed by the Minister of Social Welfare, is presented with the award on April 15, Transgender Day. The awardee is also given a cheque for Rs. 1 lakh, a certificate in appreciation of service and achievements.
  • In that regard, Chief Minister M.K. Stalin presented the Tamil Nadu Government's Best Transgender Award for the year 2025 and a cheque of Rs. 50,000 each and a certificate of appreciation. 
  • Minister P. Geethajeevan, Chief Secretary N. Muruganandam, Social Welfare Secretary Jayasree Muralitharan, and Social Welfare Commissioner R. Lilly participated in the event.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel