
1st APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார்
- குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
- இந்த நிகழ்ச்சியில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராணுவத் தளபதிகள் மாநாடு 2025
- ராணுவ தளபதிகள் மாநாடு 2025 ஏப்ரல் 01 முதல் 4 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும், வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிப்பதற்கான முக்கிய செயல்பாட்டு முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு இந்த மாநாடு ஒரு தளமாக செயல்படுகிறது.
- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சருக்கான அமர்வுக்கு தலைமை தாங்கி முக்கிய உரையாற்றுவார்.
- இந்த அமர்வில் 'சீர்திருத்த ஆண்டில்' இந்திய ராணுவத்தின் கவனம் குறித்த விளக்கக்காட்சியும் இடம்பெறும். ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே முப்படைத் தளபதி இந்த மாநாட்டில் முக்கிய உரையாற்றுவார்.