இன்டாக் / INTACH: இன்டாக் (INTACH) என்பது இந்தியாவின் முதன்மையான பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பாகும். இது 1984-ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி முறையாக நிறுவப்பட்டது.
இது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்தல், நமது மகத்தான கலை, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவற்றை ஊக்குவித்தல் ஆகியவை இதன் பணியாகும்.
கலாசார, இயற்கை வளங்கள், மரபுரிமைகள், கலாசார புத்தாக்க செயல்பாடுகளுக்கு நிதி, தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்கும் அமைப்பாகவும் இது செயல்படுகின்றது.
இன்டாக் சாசனம் 2004-ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் பாரம்பரிய பாதுகாப்பிற்கு வழிகாட்டும் அடிப்படை ஆவணமாக செயல்படுகிறது.
பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியின் தன்மையை அங்கீகரித்து, பாரம்பரியத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் சாசனத்தை மாற்றியமைக்கும் பணியில் இது தற்போது ஈடுபட்டுள்ளது.
ENGLISH
INTACH: INTACH is India's premier heritage conservation organization. It was formally established on 27th January 1984. It is a nationally registered society under the Societies Registration Act (1860).
Its mission is to protect the environment, revitalize heritage, create awareness about our great art and heritage and promote them. It also functions as an organization that provides financial and technical expertise for cultural, natural resources, heritage and cultural innovation activities.
The INTACH Charter was adopted in 2004. It serves as the basic document guiding heritage conservation in India. It is currently in the process of revising the Charter to ensure that it recognizes the evolutionary nature of heritage and encompasses all aspects of heritage.