
5th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் உயிர் காக்கும் அமைப்பு முறை சோதனை வெற்றி
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) கீழ் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஆய்வு நிறுவனமான பாதுகாப்பு உயிரி- பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகமானது (டிஇபிஇஎல்) இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானத்திற்கான உள்நாட்டு ஆன்-போர்டு ஆக்ஸிஜன் ஜெனரேட்டிங் சிஸ்டம் (ஓபிஓஜிஎஸ்) அடிப்படையிலான ஒருங்கிணைந்த உயிர் காக்கும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மார்ச் 4-ம் தேதியன்று விண்ணில் உயரமான இடத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதனை நடத்திப் பார்த்தது.
- இந்த ஆக்சிஜன் உருவாக்கக் கருவிகள் விமானப் பயணத்தின்போது விமானிகள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை உருவாக்கவும் ஒழுங்குபடுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன அமைப்பாகும்.
- இது திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் அடிப்படையிலான அமைப்புகளைச் சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் முகமையின் இலகு ரக போர் விமானங்களின் மாதிரி விமானத்தில் இந்தக் கருவிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- கடல் மட்டத்திலிருந்து 50,000 அடி உயரம் வரை சென்று சோதனை நடத்தப்பட்டதில், இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைப் பூர்த்தி செய்துள்ளன.
- உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 3,583 மீ (11968 அடி) உயரத்தில் அமைந்துள்ளது கேதார்நாத். கௌரிகுண்டிலிருந்து 16 கி.மீ உயர மலையை ஏறி கேதார்நாத்துக்கு செல்ல வேண்டும்.
- ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் கேதார்நாத் வருகை தருவார்கள்.
- மலையேற முடியாத பக்தர்கள், குதிரைகள், பல்லக்குகள் அல்லது ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டும். இந்த நிலையில், கேபிள் கார் திட்டம் நிறைவடைந்தால் ஒரு மணிநேரத்தில் 1,800 பயணிகளும், நாளொன்றுக்கு சுமார் 18,000 பயணிகளும் செல்ல முடியும்.
- கேதார்நாத் செல்லும் பக்தர்களின் ஒருவழிப் பயண நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 36 நிமிடங்களாகக் குறையும். சோன்பிரயாக்கில் இருந்து கேதார்நாத் வரை மொத்தம் 12.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த திட்டம் அமைக்கப்படவுள்ளது.
- பொது - தனியார் கூட்டமைப்பில் உருவாகும் கேபிள் கார் திட்டத்துக்கு ரூ. 4,081.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிநவீன ட்ரை கேபிள் கோண்டோலா தொழில்நுட்பத்தில் அமைக்கப்படவுள்ளது.
- இந்த திட்டத்தின் மூலம், ஆண்டு முழுவதும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளும் வியாபாரிகளும் அதிகரிப்பார்கள்.
- இதற்கான திட்ட அறிக்கைகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் திருத்தியமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
- இந்தத் திட்டம் தேசிய கால்நடை, நோய் கட்டுப்பாடு, பசு மருந்தகங்கள் என மூன்று கூறுகளைக் கொண்டது. தீவிர கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம், தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களை நிறுவுவதற்கும் அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் உதவிடும்.
- நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு, விலங்குகளுக்கான நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு உதவி செய்வது போன்ற துணைக் கூறுகளையும் கொண்டுள்ளது. பசு மருந்தகங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய அம்சமாகும்.
- இத்திட்டங்களுக்காக 2024-25, 2025-26 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த செலவு 3,880 கோடி ரூபாயாகும்.
- இதில், நல்ல தரமான, குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, பசு மருந்தகத்தின் கீழ் மருந்துகளின் விற்பனைக்கான ஊக்கத்தொகை ஆகியவை அடங்கும்.
- கோமாரி நோய், கன்று வீச்சு நோய், மூளை தண்டுவட திரவம், தோல் கட்டி நோய் போன்ற நோய்களால் கால்நடைகளின் உற்பத்தித்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
- இது போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும் வகையில் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் இழப்புகளைக் குறைக்க இயலும்.
- நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளின் துணைக்கூறுகள் மூலம் கால்நடை சுகாதார சேவையை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்குவதற்கும், பிரதமரின் வேளாண் நல மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொதுவான கால்நடை மருந்துகளை பசு மருந்தகங்கள் மூலம் கிடைக்கச் செய்யவும் இத்திட்டம் வகை செய்கிறது.
- தடுப்பூசி, தொடர் கண்காணிப்பு, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் கால்நடை நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் இத்திட்டம் உதவுகிறது. மேலும், இத்திட்டம் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவித்து, விவசாயிகளின் பொருளாதார இழப்புகளைத் தடுக்க உதவுகிறது.