
30th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத், சுவாமி கோவிந்த் தேவ்கிரி மகராஜ், சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ், டாக்டர் அவினாஷ் சந்திர அக்னிஹோத்ரி, பிற சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் நடைபெற்ற பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகள் செமி கிரையோஜனிக் என்ஜின் கட்டமைப்பின் முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
- 2000 கிலோ நியூட்டன் என்ற அளவிலான வெப்ப சோதனையுடன் செமி கிரயோஜனிக் மேம்பாட்டு திட்டத்தில் இஸ்ரோ மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
- மேம்படுத்தப்பட்ட செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையில் சிறந்த செயல்திறன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட என்ஜின் அமைப்புகள் என அனைத்தும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெற்றி அடைந்துள்ளது.