Type Here to Get Search Results !

26th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
  • சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை இத்திட்டம் ஆய்வு செய்கிறது.அதன் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்நூல்களை வெளியிட, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநர் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டார்.
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்
  • பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • அதோடு மட்டுமின்றி அனைத்துப் பேரிடர்களிலும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுவதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 -ன் படி பேரிடர்களைக் கையாள்வதில் மாநில அரசுகள் சிரமங்களைச் சந்திப்பதாகவும், இதில் உள்ள சவால்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை மாநில அரசுகளிடமிருந்து பெற்று இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • இச்சட்டத்தின் மூலம் பேரிடர் மீட்புப் பணிகளில் பங்கேற்கும் பல்வேறு அமைப்புகளுக்கு பொறுப்புகள் பிரித்து, சீராக வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்து பேரிடரில் பணியாற்றுவதில் உள்ள படிநிலைகள் குறித்தும் வகை செய்யப்பட்டுள்ளன.
  • கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel