
25th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
- தில்லி ஐஐடியில் பயின்ற மாணாக்கர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்கள் பிள்ளைகள் மேற்கண்ட கல்வி நிறுவனத்தில் சாதி ரீதியான பாகுபாட்டாலும் தங்களுக்கு திணிக்கப்பட்ட அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வழக்குப்பதிய தவறிவிட்டதாகவும் அவர்தம் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று(மார்ச் 24) நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதைஉறுதி செய்வது கட்டாயக் கடமையாகும்.
- கல்வி நிறுவனங்கள் வெறுமனே கல்வியறிவை கற்பிக்கும் இடம் மட்டுமல்ல; மாணவர்களின் நலன் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் இந்நிறுவனங்களே பொறுப்பாகும் என்று உச்சநீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.
- ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அங்கு பயிலும் மாணவர்கள், தங்கள் மீது எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை, பயமின்றி இங்கு நாம் படிக்கலாம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வழிவகை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள் தற்கொலை குறித்த இவ்விவகாரத்தில் இந்த செயற்குழு உரிய விசாரணை நடத்தி அடுத்த நான்கு மாதங்களில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மேலும், விரிவான விசாரணை அறிக்கையை 8 மாதங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குழுவுக்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கிடவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கொதிகலன்கள் மசோதா, 2024-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
- இது கொதிகலன்கள் சட்டம், 1923 (1923-ன் 5)-ஐ ரத்து செய்கிறது. இந்த மசோதா முன்னதாக 4 டிசம்பர் 2024 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, மேலும் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
- புதிதாக இயற்றப்பட்ட சட்டம் நாட்டில் உள்ள தொழில்துறையினர், கொதிகலன்களைப் பயன்படுத்தும் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப உள்ளது.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் உள்ளவர்கள் உட்பட பாய்லர் பயனர்களுக்கு இந்த மசோதா பயனளிக்கும். கொதிகலன்களைக் கையாளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்தக்கூடிய நான்கு முக்கிய குற்றங்களில், குற்றவியல் தண்டனைகள் முன்பு இருந்ததன்படியே நீடிக்கும்.
- மற்ற குற்றங்களுக்கு, நிதி அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரிமினல் அல்லாத அனைத்து குற்றங்களுக்கும் 'தண்டம்' என்பது முன்பு இருந்ததைப் போல நீதிமன்றங்களுக்கு பதிலாக நிர்வாக அமைப்பு மூலம் விதிக்கப்படும் அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.
- கொதிகலனுக்குள் பணிபுரியும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கொதிகலன் பழுதுபார்ப்பது தகுதி வாய்ந்த மற்றும் தகுதிவாய்ந்த நபர்களால் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த மசோதாவில் குறிப்பிட்ட விதிகள் செய்யப்பட்டுள்ளதால், இது பாதுகாப்பை மேம்படுத்தும்.