
24th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரிய விருதுகள் 2024
- ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரிய தினம் ஆண்டுதோறும் டெல்லியில் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- அதன்படி, ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரியம் பல்வேறு பிரிவுகளில் நீர்வளத்துறையில் 2024ம் ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை கோரியது. தமிழ்நாடு நீர்வளத்துறை விருதுகளுக்காக விண்ணப்பித்தது.
- ஒன்றிய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரியம் 2024ம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை வழங்க தமிழ்நாடு நீர்வளத்துறையை தேர்வு செய்துள்ளது.
- அதன்படி பங்கேற்பு பாசன மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மையில் சிறந்து விளங்குதல் - உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், சிறந்த நீர்வள ஆதாரத் திட்டமான சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை நீரேற்று பாசனம் மூலம் திருப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ்நாடு நீர்வளத்துறைக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மோடி அரசு விவசாயிகளுக்கு உகந்த அரசு என்றும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்குவதும், நியாயமான விலையை உறுதி செய்வதும் அதன் முன்னுரிமை மற்றும் உறுதிப்பாடு என்றும் கூறினார். முன்னதாக வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.
- ஆனால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கி, விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைக்கத் தொடங்கியபோது, வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40%-லிருந்து 20%-மாக குறைக்க அரசு முடிவு செய்தது என்று திரு சவுகான் தெரிவித்தார். இன்று 20% ஏற்றுமதி வரியையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.