
1st MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2025 பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல்
- உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதியின் மூலம் கிடைத்த வருமானத்தின் அதிகரிப்பால், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
- பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 35,204 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 43,704 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 90,870 கோடியாகவும் மற்றும் கூடுதல் வரி ரூ. 13,868 கோடியாகவும் வசூலாகி உள்ளன.
- இதன்மூலம், மொத்தம் ரூ. 1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலான நிலையில், தற்போது ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- 2025 பிப்ரவரி 24 முதல் 28 வரை ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையால் "எக்சர்சைஸ் டெசர்ட் ஹண்ட் 2025" என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த முப்படை சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
- இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைகள், இந்திய கடற்படையின் கமாண்டோக்கள், இந்திய விமானப்படையின் கருட் சிறப்புப்படையினர் இணைந்து பங்கேற்றனர்.
- பாதுகாப்பு சவால்களை எதிர்த்து விரைவான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக மூன்று சிறப்புப் படை பிரிவுகளிடையே செயல்திறன், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சி இதுவாகும்.
- இந்த பயிற்சியில் வான்வழி நடவடிக்கைகள், துல்லி தாக்குதல்கள், பிணைக் கைதிகள் மீட்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடைமுறைகள் அடங்கும். இதில் படைகளின் போர் தயார்நிலையும் சோதிக்கப்பட்டது.