Type Here to Get Search Results !

18th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மகாராஷ்டிராவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.620 கோடி 15வது நிதி ஆணைய மானியம்
  • மகாராஷ்டிராவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில்  பதினைந்தாவது நிதிக்குழு  மானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • ஒருங்கிணைந்த மானியத்தின் இரண்டாம் தவணைத்தொகை ரூபாய் 611.6913 கோடி மற்றும் ஒருங்கிணைந்த மானியத்தில் முதல் தவணையின் நிலுவைத் தொகை ரூபாய் 8.4282 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த நிதி மாநிலத்தின் தகுதியான 4 மாவட்ட ஊராட்சிகள், 40 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 21551 தகுதியுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.
தெலங்கானா பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்
  • தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை கடந்த மாதம் மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.
  • மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவிகிதம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கானா பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு மசோதா 2025 மற்றும் தெலுங்கானா பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீடு மசோதா 2025 ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாக்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோல், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15 சதவிகிதத்தில் இருந்து 18 ஆகவும், பழங்குடியினவர்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவிகிதத்தில் இருந்து 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதன்மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel