
11th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னி தேர்வு
- கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறாா்.
- ஹாா்வா்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை முடித்த மாா்க் காா்னி, அமெரிக்காவின் கோல்ட்மன் சாஷ்ஸ் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றினாா்.
- பின்னா் கனடா நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடாவில் துணை ஆளுநராக 2003-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அவருக்கு, ஓராண்டு கழித்து கனடா அரசின் நிதியமைச்சகத்தில் முதுநிலை துணை இணையமைச்சா் என்ற நியமனப் பொறுப்பு வழங்கப்பட்டது.
- பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த அவா், 2024-ஆம் ஆண்டில் கனடாவின் பொருளாதார வளா்ச்சிக்கான திட்டக் குழுவின் தலைவராக பிரதமா் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டாா்.
- கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பாக்சியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும்படி ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
- இதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மால்யா பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஜூன் 27ல், கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மால்யா நியமிக்கப்பட்டார்.
- அதன்பின், 2021ல் ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 33ல் 34 ஆக அதிகரிக்கும்.
- புதுதில்லி மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் கொல்கத்தாவின் அடமாஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஹோமியோபதி துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- நோபல் பரிசு பெற்ற சர் கிரிகோரி பால் வின்டர் மற்றும் கொல்கத்தாவின் அடமாஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் சமித் ரே ஆகியோர் முன்னிலையில், மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமத் தலைமை இயக்குநர் டாக்டர் சுபாஷ் கௌசிக் மற்றும் அடமாஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுரஞ்சன் தாஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் 2025 மார்ச் 1-ம் தேதி கையெழுத்திட்டனர்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்துறை ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
- மாற்று மருத்துவத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது.
- இந்த கூட்டாண்மையானது கல்வி உறவுகளை வலுப்படுத்தி, கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவுவதோடு, ஹோமியோபதியைப் பரவலாக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கும், முக்கிய சுகாதார சேவையில் ஒருங்கிணைப்பதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.