பாரத்போல் இணையதளம் / BHARATPOL PORTAL: பாரத்போல் தளம் (போர்ட்டல்) 07.01.2025 அன்று இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது.
நாடு கடந்த குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், திட்டமிட்ட இணையதளக் குற்றங்கள், பொருளாதார மோசடி, குழந்தைகள் ஆபாசப்படம், பயங்கரவாதம் போன்றவை தொடர்பான குற்றவியல் விஷயங்களில் வெளிநாட்டு சட்ட அமலாக்க முகமைகளின் உதவியை நாடுவதற்கு இந்திய சட்ட அமலாக்க முகமைகளுக்கு உதவும் வகையில் இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, பாரத்போல் தளம் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது - இணைப்பு, ஒளிபரப்பு பகுதி, இன்டர்போல் குறிப்புகள் பகுதி, இன்டர்போல் அறிவிப்புகள் பகுதி & வளங்கள் பகுதி.
இந்த ஐந்து பகுதிகளும், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யை, இன்டர்போலுடனும் மாநில விசாரணை அமைப்புகளுடனும் ஒருங்கிணைத்து தகவல் தொடர்பை எளிதாக்குகிறது.
தற்போது 51 சட்ட அமலாக்க முகமைகள், 500-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் இந்த இணையதளத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
சிபிஐ தலைமையகத்தில் 07.01.2025 அன்று இன்டர்போல் தொடர்பு அதிகாரிகளுக்கு, பாரத்போல் தளம் குறித்தும் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு குறித்தும் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது.
07.01.2025 அன்று இந்த இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த தளம் மூலம் சட்ட அமலாக்க முகமைகளிடமிருந்து இன்டர்போல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான 16 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதேவேளை, வெளிநாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்களிடமிருந்து உதவி கோரி 08 இன்டர்போல் குறிப்பீடுகள் இந்த தளத்தின் மூலம் பெறப்பட்டுள்ளன.
இந்திய சட்ட அமலாக்க முகமைகளிடமிருந்து உதவி கோரி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட 30 சர்வதேச குறிப்புகள் இந்த தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
ENGLISH
BHARATPOL PORTAL: BHARATPOL portal was launched on 07.01.2025 by Shri Amit Shah, Union Home Minister of India. The modules seek to provide assistance to indian law enforcement agencies in seeking assistance from foreign law enforcement agencies in criminal matters relating to transnational organized crime, trafficking in narcotics, migrants and arms, organized cyber crimes, economic fraud, child pornography and terrorism etc. Currently, BHARATPOL Portal has the following five modules:
Connect Module: It connects CBI as National Central Bureau for INTERPOL in India with all law enforcement authorities in India on a single platform.
Broadcast Module: Requests from foreign countries for assistance or criminal intelligence shared by foreign countries can be transmitted for action or information to Indian law enforcement agencies.
INTERPOL References Module: It facilitates rapid international assistance through INTERPOL channels to Indian law enforcement agencies for Investigation abroad.
INTERPOL Notices Module: It facilitates rapid, secure and structured transmission of requests for INTERPOL Notices to Indian Law Enforcement Agencies.
Resources Module: It provides access to relevant documents and capacity building resources.
All INTERPOL Liaison Officers (ILOs) of all States/UTs and Central Law Enforcement Agencies are connected with CBI and all Unit Officers (UOs) of States/UTs Central Law Enforcement Agencies are connected with respective ILOs through connect module of BHARATPOL Portal.
Presently 51 Law Enforcement Agencies (Annexure 1) and more than 500 unit offices of various law enforcement agencies are connected through this portal.
A training session was conducted at CBI Headquarters on 07.01.2025 (afternoon) for all INTERPOL Liaison Officers (ILOs) on BHARATPOL Portal vis-a-vis International Police Cooperation.
For capacity of the law enforcement agencies in respect of the use of the portal, in person training courses are being scheduled in coming months. The CBI academy at Ghaziabad is also organising training programme for BHARATPOL for creating awareness of the Portal and its effective use among the law enforcement agencies.
BHARATPOL Portal has already started receiving requests from States/UTs and Central Law Enforcement Agencies for publication of INTERPOL Notices and requests for assistance in criminal matters through INTERPOL References.
Since the launch of the portal on 07.01.2025, Sixteen (16) requests for publication of Interpol notices have been received from the Law Enforcement Agencies through this Portal.
At the same time Eight (08) Interpol references seeking assistance from Foreign Law Enforcement Agencies have been received through this Portal. Thirty (30) international references received from foreign countries seeking assistance from Indian law enforcement agencies have been forwarded through this portal.