
3rd FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024-25--ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்), வளர்ச்சிப் பாதையில் கனிமங்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் உற்பத்தி
- 2023-24-ம் நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- மொத்த கனிம உற்பத்தியில் மதிப்பின் அடிப்படையில் இரும்பு தாது பங்கு 69% ஆகும். 2023-24-ம் நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல்-டிசம்பர் வரையான காலகட்டத்தில் 203 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 208 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
- இது ஆரோக்கியமான 2.5% வளர்ச்சியைக் காட்டுகிறது. மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 8.3% அதிகரித்து 2.6 மில்லியன் மெட்ரிக் டன் என்று அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 2.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- குரோமைட்டின் உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 9.5% அதிகரித்து 2.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 2.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- கூடுதலாக, பாக்சைட் உற்பத்தியும் 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 17.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 6.5% அதிகரித்து 18.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
- இரும்பு அல்லாத உலோகப் பிரிவில், 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 1.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- இது 2023-24-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 31.07 லட்சம் டன்னிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) 31.56 லட்சம் டன் ஆக அதிகரித்துள்ளது. அதே ஒப்பீட்டு காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தி 3.69 டன்னிலிருந்து 3.96 டன்னாக 7.3% அதிகரித்துள்ளது.
- அலுமினிய உற்பத்தியில், இந்தியா 2வது இடத்திலும், சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தியில் 10-வது இடத்திலும் உள்ளது. இரும்புத் தாது உற்பத்தியில் உலகின் 4-வது இடத்தில் உள்ளது.
- இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பயனர் துறைகளில் தொடர்ச்சியான வலுவான பொருளாதாரச் செயல்பாட்டை நோக்கிய பயணமாக உள்ளது.
- உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்றுநோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்து வருகிறது.
- இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே மதிப்பிடப்படுகிறது.
- இந்தியாவில் பரவலாக உள்ள புற்றுநோய்களுக்கென மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளைக் கண்டறியக்கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ பட்டியலிடப்படவில்லை.
- இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசை முறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.
- மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து சென்னை ஐஐடி இந்திய மார்பகப் புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் பெயர் குறிப்பிடப்படாத சுருக்கத்தை சேகரித்தது. உலக புற்றுநோய் தினம் நாளை (பிப்ரவரி 4, 2025) கடைபிடிக்கப்படும் நிலையில் இந்தப் பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் நிறைவடைந்ததாக அறிவித்துள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
- இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் வெளிப்படையாக அணுகக்கூடிய வகையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், bcga.iitm.ac.in என்ற தரவுத்தளத்தை இக்கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
- குறைந்த செலவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக சென்னை ஐஐடி மற்றும் கார்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து, புற்றுநோய்க்கான தேசிய துல்லிய மருத்துவ மையத்தின் கீழ் இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.