
27th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) கனிம, இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு
- 2023-24-ம் நிதியாண்டில் கனிம வளங்களின் உற்பத்தியில் சாதனைப் படைத்ததற்குப் பிறகு நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) தொடர்ந்து வலுவான வளர்ச்சிக் கண்டுவருகிறது.
- கனிம உற்பத்தி அதன் மதிப்பின் அடிப்படையில் இரும்புத் தாது 70% ஆகும். 2023-24-ம் நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 228 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 236 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 3.5 சதவீதத்துடன் சீரான வளர்ச்சியைக் காட்டுகிறது. மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 11.1% அதிகரித்து 3.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. குரோமைட்டின் உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 8.7% அதிகரித்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, பாக்சைட் உற்பத்தியும் 2023-24-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 19.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 5.6% அதிகரித்து 20.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
- இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைக் காட்டிலும் 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 35.10 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 34.67 லட்சம் டன்னாக இருந்தது. இதே காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 4.19 லட்சம் டன்னிலிருந்து 4.50 லட்சம் டன்னாக 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சுத்திகரிக்கப்பட்ட தாமிர மற்றும் அலுமினியம் உற்பத்தியில் உலக அளவில் முதல் 10 இடங்களில் இந்தியா 2-வது இடத்திலும், இரும்புத் தாது உற்பத்தியில் உலகின் 4-வது பெரிய நாடாகவும், இந்தியா உள்ளது. நடப்பு நிதியாண்டில் இரும்புத்தாது உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சிக் காரணமாக எஃகு உலோகத்தின் தேவை அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
- தில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் புதுதில்லியில் உள்ள ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனமானது.
- "விண்வெளி கதிர்வீச்சு, கன அயனிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களின் உயிரியல் விளைவுகள் குறித்த சர்வதேச கதிரியக்க உயிரியல் மாநாட்டை " நடத்துகிறது. மூன்று நாட்கள் நடைபெறும்.
- இந்த சர்வதேச மாநாட்டை மானெக்ஷா மையத்தில் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தொடங்கி வைத்தார்.