
24th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு முழுவதும் 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- முன்னதாக, முதலமைச்சர் அமைச்சர் அவர்கள் சென்னை, தியாகராய நகர் - பாண்டி பஜாரில், கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, பொது மக்களுக்கு முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்துகளின் விற்பனையை தொடங்கி வைத்தார்.
- விவசாயிகள் நலனை உறுதி செய்வதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று விடுவித்தார்.
- இந்த நிகழ்ச்சியின் போது பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். மெய்நிகர் முறையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பிரமுகர்களையும், மக்களையும் திரு மோடி வரவேற்றார்.
- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- இந்த உச்சி மாநாடு மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள், போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து, தொழில்துறை, திறன் மேம்பாடு, சுற்றுலா, எம்எஸ்எம்இ உள்ளிட்ட சிறப்பு அமர்வுகளை கொண்டிருந்தது.
- 60-க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், இந்தியாவை சேர்ந்த 300-க்கும் அதிகமான பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
- விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் (அடிப்படை: 1986-87=100) 2025 - ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முறையே 4 & 3 புள்ளிகள் குறைந்து, 1316 & 1328 புள்ளிகளை எட்டியுள்ளது.
- 2025 - ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதங்கள் முறையே 4.61% & 4.73% ஆக பதிவாகியுள்ளன.
- இது 2024 - ம் ஆண்டு ஜனவரியில் 7.52% & 7.37% ஆக இருந்தது. 2024 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 5.01% - வீதமாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான விலைக் குறியீடு 5.05% ஆகும்.