மக்கள் தொகைக்கும், காவல்துறை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறித்த அறிக்கை 2023 / REPORT ON RATIO BETWEEN POPULATION AND POLICE FORCE 2023
TNPSCSHOUTERSFebruary 06, 2025
0
மக்கள் தொகைக்கும், காவல்துறை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறித்த அறிக்கை 2023 / REPORT ON RATIO BETWEEN POPULATION AND POLICE FORCE 2023: மக்கள் தொகைக்கும், காவல்துறை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறித்த தகவல்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 159.54 காவலர்கள் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த விகிதம் முறையே 156.89, 148.54, 155.77 மற்றும் 154.25 ஆக இருந்தது.
மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில், பஞ்சாபில் ஒரு லட்சம் மக்களுக்கு 241.02 காவலர்களும், இமாச்சலப் பிரதேசத்தில் 240.40 காவலர்களும், ஹரியானாவில் 199.08 காவலர்களும், உத்தராகண்டில் 183.96 காவலர்களும், ஆந்திராவில் 165.89 காவலர்களும் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக, பீகாரில் ஒரு லட்சம் மக்களுக்கு 81.49 காவலர்களே உள்ளனர். மேற்கு வங்காளத்தில் 101.13 காவலர்களும், ராஜஸ்தானில் 118.18 காவலர்களும், ஒடிசாவில் 120.58 காவலர்களும், மத்தியப் பிரதேசத்தில் 121.13 காவலர்களும் உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாகாலாந்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 1,135.9 காவலர்களும், மணிப்பூரில் 941.63 காவலர்களும், சிக்கிமில் 834.40 காவலர்களும், அருணாச்சலப் பிரதேசத்தில் 766.75 காவலர்களும் உள்ளனர்.
கிளர்ச்சி அச்சுறுத்தல், மலைப்பாங்கான நிலப்பரப்பு, பல்வேறு இனக்குழுக்கள் இடையேயான மோதல்கள் மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு ஆகியவை வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணங்களாகும்.
ENGLISH
REPORT ON RATIO BETWEEN POPULATION AND POLICE FORCE 2023: The population-to-police ratio has been submitted to Parliament. Accordingly, Tamil Nadu has 159.54 police officers per lakh population. This figure is higher in 2023 compared to the last five years. In 2019, 2020, 2021 and 2022, this ratio was 156.89, 148.54, 155.77 and 154.25 respectively.
Among the most populous states, Punjab has 241.02 police officers per lakh population, Himachal Pradesh has 240.40 police officers, Haryana has 199.08 police officers, Uttarakhand has 183.96 police officers and Andhra Pradesh has 165.89 police officers.
As per the United Nations recommendation, there should be 222 police officers per lakh population. Bihar has the lowest police force per lakh population at 81.49. West Bengal has 101.13, Rajasthan has 118.18, Odisha has 120.58 and Madhya Pradesh has 121.13.
The Northeastern states have the highest police force. Nagaland has 1,135.9, Manipur has 941.63, Sikkim has 834.40 and Arunachal Pradesh has 766.75. The threat of insurgency, hilly terrain, inter-communal conflicts and international border security are the reasons for the high police force in the Northeastern states.